தீவிர சிகிச்சை பெற்று வரும் நிதியமைச்சர்

நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட் நேற்று திடீரென பக்கவாதத்­தினால் பாதிக்­கப்­பட்­டார். அவ­ருக்கு மருத்­து­வர்­கள் சிகிச்சை அளித்து வரு­கின்ற­னர். அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தில் பங்­கேற்­றி­ருந்த அவர் மாலை 5.34க்கு மயங்கி விழுந்தார் என்று பிர­த­மர் அலு­வ­லக அறிக்கை தெரிவித்தது. அமைச்சர் ஹெங் உட­ன­டி­யாக மருத்­து­வ­மனைக்குக் கொண்டு­செல்­லப்­பட்­டார். அங்கு ‘சிடி ஸ்கேன்’ செய்­த­தில் அவர் பக்­க­வாதத்­தினால் பாதிக்கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்தது. “அவ­ருக்கு மருத்­து­வர்­கள் சிகிச்சை அளித்து வரு­கின்ற­னர்,” என்று அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

திரு ஹெங்கின் உடல்­ந­லம் குறித்து அக்­கறை­யு­டன் உட­ன­டி­யாக தமது ஃபேஸ்­புக்­கில் பதிவு செய்த பிர­த­மர் லீ சியன் லூங், “சுவீ கியட் விரைவில் நல­மா­கி­ வி­டு­வார் என்று நம்­பு­கி­றேன். எனது குழுவில் அவர் மதிப்­பு­மிக்க உறுப்­பி­னர்,” என்று அதில் எழு­தி­யி­ருந்தார். வாராந்­திர கூட்­டத்­தின்­போது திரு ஹெங் திடீரென மயங்கி விழுந்த­தாக பிர­த­மர் தெரி­வித்­தார். “அமைச்­ச­ரவை­யில் இருந்த மூன்று மருத்­து­வர்­கள் அவரை உடனே கவ­னித்­த­னர். “ஆம்­புலென்ஸ் அழைக்­கப்­பட்­டது.

அமைச்­சர் ஹெங், டான் டொக் செங் மருத்­து­வ­மனைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார். சிடி ஸ்கேன் அவர் பக்­க­வாதத்­தால் தாக்­கப்­பட்­டுள்­ளதைக் காட்­டி­யது. மருத்­து ­வர்கள் அவ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கின்ற­னர்,” என்று விவ­ரித்­தார் திரு லீ. அவர் நலம் வேண்டி பிரார்த் தனை செய்வதாக அதிபர் டோனி டான் கெங் யாம் தெரிவித்துள்ளார். துணைப் பிர­த­மர்­கள் டியோ சீ ஹியனும் தர்மன் சண்­மு­க­ரத்­ன­மும் திரு ஹெங் விரைவில் குணம் அடைய வேண்­டு­வ­தா­கக் கூறினர்.