முதியோருக்காக ஊட்டச்சத்து கையேடு; விரைவில் 250,000 பிரதிகள் விநியோகம்

சிங்கப்பூரில் மூத்த குடிமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உணவு உண்பதற்கு உதவியாக புதிய வழிகாட்டி கையேடு ஒன்றைச் சுகாதார மேம்பாட்டு வாரியம் உருவாக்கி இருக்கிறது. முதியோர் அந்தக் கையேட் டின் உதவியுடன் உடல்நலத்திற்கு ஏற்ற உணவு வகைகளைத் தேர்ந் தெடுத்துக்கொள்ளலாம். அத்த கைய உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதைப் பற்றிய விளக்கங்களும் கையேட்டில் இருக்கின்றன. ஊட்டச்சத்து வழி காட்டி, சமையல் புத்தகம், போத னைச் சுவரொட்டி ஆகியவை அடங்கிய ஒரு தொகுப்பைச் சுகா தார மேம்பாட்டு வாரியம் 'நலமான முதுமைக்கான சமையல் குறிப்பு' என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. சுண்ணாம்புச்சத்து, புரதம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் பற்றிய தகவல் களும் அதில் இருக்கின்றன.

ஊட்டச்சத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட் டிருக்கும் அந்தக் கையேட்டுத் தொகுப்பு சரியான நேரத்தில் இடம்பெறும் ஒன்றாக இருக்கிறது என்று நேற்று அதை வெளியிட்டு பேசிய சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரி வித்தார். நீரிழிவு நோய்க்கு எதிராக சிங்கப்பூர் அரசாங்கம் போர் தொடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். "சரியாக நாம் சாப்பிட்டால் முதிய வயதில் நமக்கு உடல் நலம் சிறப்பாக இருக்கும்," என்றார் அவர். நல்ல சத்துணவு முக்கியம் என்பதை முதியோர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்த வாரியம் விரும்புகிறது. அப்படிச் செய்யலாம் என்று வாரியம் நம்புகிறது.

முதியவர்களுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டியுடன் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு சமைப்பது எப்படி போன்ற விளக்கங்களை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் (நடுவில், நிற்பவர்) ஆரோக்கியமான ரொட்டி உணவுகளைத் தயாரிக்கும் முறையைப் பார்வையிடுகிறார். படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!