புதிய வசதிகளுடன் மரின் பரேட் பலதுறை மருந்தகம்

புதுப்பிப்புப் பணிகளை அடுத்து மரின் பரேட் பலதுறை மருந்தகத் தில் நோயாளிகளின் சௌகரியத்துக்குப் புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, மருந்தகம் முன்பைவிட இரண்டு மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மரின் பரேட் பலதுறை மருந்தகம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. எக்ஸ்-ரே சேவைகள், கூடுதல் சேவை அறைகள், கூடுதல் முனையங்கள், கூடுதல் காத்திருப்பு இடங்கள் போன்ற வசதிகளை அது கொண்டிருக்கிறது.

காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, ஒட்டுமொத்த சேவையை மேம்படுத்தும் நோக்கில் நாட்பட்ட நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாகப் புதிய வசதி அமைத்துத் தரப் பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மருந்தகம் முதியோருக்கு உதவும் வகையில் சரிவுப் பாதைகள், கைப்பிடிகள், மின்தூக்கிகள் போன்ற வசதி களைக் கொண்டிருக்கிறது. முன் பதிவு செய்யாமல் மருந்தகத்துக்கு வந்து காத்திருப்பதைவிட, தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து குறிப்பிடப்பட்ட நேரத்தில் மருந்தகத்திற்கு வந்து மருத்துவச் சேவையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'பில்பாக்ஸ்' பாதுகாப்புப் பெட்டியிலிருந்து மருந்துகளைப் பெற்றுக்கொள்வது எப்படி என்பதைப் பார்வையிடும் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!