பொருளியல் மேம்பாட்டுக்கான அதிபர் பயணம்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி இத்தாலிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் தடம்பதிக்கச் செய்ய ஆவன செய்யும் வகையில் சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமின் இத்தாலியப் பயணம் அமையும் எனக் கூறப்படுகிறது. முப்­படை­களைச் சேர்ந்த மரி­யாதைக் காவலணி புடைசூழ, இத்தாலிய அதி­ப­ரின் அதி­கா­ர­பூர்வ இல்­ல­மான பலாஸ்ஸே„ டெல் குய்­ரினா­லில் சிங்கப்­பூர் அதிபர் டோனி டான் கெங் யாமுக்கு அதி­கா­ர­பூர்வ வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. அதிபர் டோனி டானுடன் அவரது துணை­வி­யா­ரும் உடன் இருந்தார். ரோமில் உள்ள ஏழு மலை­களின் உச்­சி­யில் அமைந்­தி­ருக்­கும் 16வது நூற்­றாண்டைச் சேர்ந்த இந்த இல்­லத்­தின் மீது சிங்கப்­பூ­ரின் தேசி­யக் ­கொடி ஏற்­றப்­பட்­ட­து­டன் அங்கு சிங்கப்­பூ­ரின் தேசிய கீதமும் இசைக்­கப்­பட்­டது.

இந்த வர­வேற்பை அதிபர் டோனி டானுக்கு அளித்த இத்­தா­லிய அதிபர் செர்ஜியோ மட்­டா­ரெல்லா அதிபர் டோனி டானையும் சந்­தித்து உரை­யா­டினார். அர­சி­யல், பொரு­ளா­தா­ரம் கலா­ சா­ரம், கல்வி, ஆராய்ச்சி, தற்­காப்பு போன்ற துறை­களில் பிணைப்பை வலுப்­படுத்­த­வும் இரு­த­ரப்பு உற­வு­களைக் கட்­டிக்­காக்­க­வும் இரு நாடு­களின் தலை­வர்­கள் மறு உறு­தி­ய­ளித்­த­னர். சிங்கப்­பூர், இத்­தா­லி­யின் முன்­னு­ரிமைப் பங்காளி என்று இத்­தா­லிய அதிபர் மட்­டா­ரெல்லா செய்­தி­யா­ளார்­கள் சந்­திப்­பில் குறிப்­பிட்­டார். விவாதத்­தின்­போது தீவிர­வாத எதிர்ப்பு, குடி­பெ­யர்­தல் ஆகிய பிரச்­சினை­களைக் கையா­ளு­வ­தில் அனைத்­ து­லகச் சமூகம் தலை­யி­ட ­வேண்­டும் என்று இரு நாட்டுத் தலை­வர்­களும் குறிப்­பிட்­ட­தா­க ­இத்தாலி அதிபர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!