கொசு ஒழிக்க புதிய கைத்தொலைபேசி செயலி

டெங்கி, ஸிக்கா கிரு­மி­களை ஒழிக்க சிங்கப்­பூர் புதிய ஆயு­தத்தை விவேக கைத்­தொலை­பே­சி­களில் உரு­வாக்கி உள்ளது. வட­மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், ஹாலந்து புக்கிட் பாஞ்சாங் நகர மன்றம், தேசிய சுற்­றுப்­புற வாரியம் ஆகியவை இணைந்து உரு­வாக்­கி­யுள்ள இந்த மோஸி வாட்ச் கீப்பர்@ நார்த் வெஸ்ட் என்ற செயலி நேற்று அறி­மு­கம் கண்டது. டெங்கி, ஸிக்கா பற்றித் தெரிந்­து­கொள்­வ­து­டன், அவற்றைத் தடுப்­பது, அடை­யா­ளம் காண்பது, கொசு பர­வுக்­கூ­டிய இடங்கள் பற்றி தகவல் தெரி­விப்­பது போன்ற­வற்­றுக்­கும் இந்த செயலி வழி உதவி பெறலாம்.

இந்த வெப்­ப­மான பரு­வ­நிலை­யில் கொசுப் பெருக்­கம் அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால், டெங்கி பர­வலை­யும் ஸிக்கா தொற்றை­யும் தடுக்­கும் நோக்கில் இந்தச் செயலி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நியூ டவுன் தொடக்­கப்­பள்­ளி­யில் நேற்று இந்தச் செய­லியைத் தொடங்கி வைத்த வடமேற்கு வட் டார மேயர் டாக்டர் டியோ ஹோ பின், “வட­மேற்கு வட்­டா­ரத்தை­யும் நமது பள்­ளி­களை­யும் மாண­வர்­களுக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கும் பாது­காப்­பான இடமாக வைத்­ தி­ருப்­ப­தில் இந்தச் செயலி பங்காற்­றும் என்று நம்­பு­வ­தா­கக் கூறினார்.

நியூ டவுன் தொடக்­கப்­பள்­ளி­யில் Mozzie Watch Keeper @ North West செய­லியைத் தொடங்கி வைத்த வடமேற்கு வட்டார மேயர் டாக்டர் டியோ ஹோ பின், பள்ளி மாணவர்களுடன் செயலியைப் பயன்படுத்திப் பார்க்கிறார். படம்: சீ கேப்ஷன்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’