தொழில்நுட்ப வசதிகளுடன் 3 பராமரிப்பு இல்லங்கள்

மறு­வாழ்வு முயற்­சி­களைத் தீவிரப்­படுத்தி பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் இருக்­கும் நோயா­ளி­கள் விரைந்து குண­மடை­வதற்­காக ‘என்­டி­யுசி ஹெல்த்’தின் ஜூரோங் வெஸ்ட் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் வழக்­க­மான சிகிச்சை முறை­களுக்­குப் பதிலாக தொழில்­நுட்­பச் சாத­னங்கள் பயன்­படுத்­தப்­படு­கின்றன. நேற்று இந்தப் பராமரிப்பு இல்லம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார். கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதத்தில் செயல்­ப­டத் தொடங்­கிய அந்த இல்­லத்­தில் தற்போது 200க்கும் மேற்­பட்ட முதியோர் பரா­ம­ரிக்­கப்­படு­கின்ற­னர். மேலும், அந்த வளா­கத்­துக்­குள் ஒரு பகல்­நே­ரப் பரா­ம­ரிப்பு இல்­ல­மும் இருக் ­கிறது. 60 முதியோர் அங்கு தின மும் பரா­ம­ரிக்­கப்­படு­கின்ற­னர்.

இல்­லத்­தில் இருக்கும் நோயா­ளி­கள், புவி­ஈர்ப்பு விசைக்கு எதிரான நடைப் ­ப­யிற்சி எந்­தி­ரத்­தில் நடந்து கால் தசை­களுக்­குப் பயிற்சி அளிக்­க­லாம். இந்த புதுவித ‘டிரட்­மில்’ நடைப்­ப­யிற்சி எந்­தி­ரத்­தில் நோயா­ளி­களின் இடுப்­புக்­குக் கீழ் உள்ள பகு­தி­களைக் காற்றுப் பை ஒன்று சூழ்ந்­தி­ருக்­கும். இதனால் நோயா­ளி­களின் எடை அவர்­க­ளது கால் எலும்பு மூட்­டு­கள், தசை­களில் அழுத்­தாத வண்ணம் காக்­கப்­படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்