ஹன்சிகாவைக் காண பேரார்வம்

வில்சன் சைலஸ்

முதன்முறையாக சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட (சைமா) விருது நிகழ்ச் சியை ஒட்டி சிங்கப்பூர் ரசிகர்களை நேற்று நேரில் சந்தித்தார் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஹன்சிகாவைக் காண லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் நேற்று மாலை ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வழி மேல் விழி வைத்துக் காத் திருந்த ரசிகர்கள் ஹன்சிகா மேடைக்கு வந்தவுடன் ஆரவாரத் துடன் 'ஹன்சிகா', 'ஹன்சிகா' என உற்சாகமாகக் குரலெழுப்பி வரவேற்றனர். அவரது வருகையை ஒட்டி 'டைவர்சிட்டி' குழுவின் நடனமணிகள் ஹன்சிகாவின் பாடல்களுக்கு ஏற்ப விறுவிறுப்பாக நடனமாடி அனைவரையும் வெகு வாகக் கவர்ந்தனர். ஹன்சிகா நடித்த படங்களில் வெளிவந்த பாடல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களில் சிலர் நடனமாடினர். அதில் வெற்றி பெற்றோர் ஹன்சிகாவுடன் மேடை யில் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பைப் பெற்று மகிழ்ந்தனர்.

ஹன்சிகா வருகையை முன் னிட்டு தமிழ் முரசு நாளிதழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நடத்திய புதிர்ப் போட்டியில் பங்கேற்ற பல ருக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஐந்து அதிர்ஷ்டசாலிகள் ஹன்சிகாவை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சைமாவில் கலந்துகொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தி னார் ஹன்சிகா. நேற்று இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை 'சிஸ்டிக்' வழியாக சைமாவுக்கான இரண்டு நுழைவுச் சீட்டுகள் வாங்கியவர்களுக்கு இலவசமாக ஒரு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.

கன்னடம், தெலுங்கு மொழி களுக்கான சைமா விருதுகள் வரும் ஜூன் 30ஆம் தேதியும் தமிழ், மலையாளத்துக்கான சைமா விருதுகள் ஜூலை 1ஆம் தேதியும் சன்டெக் சிட்டியில் நடைபெறும். நுழைவுச்சீட்டுகளை www.sistic.com இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். www.siima.in என்ற இணையத்தளத்தில் சைமா விருதுகளுக்கான முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கலாம்.

மேடையில் இருந்தபடி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஹன்சிகா. படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!