‘பெக் கியோ’ உணவங்காடி மீண்டும் திறப்பு

இரப்பைக்குழாய் உபாதை பிரச்சி னைக்குப் பிறகு இரண்டு நாட்கள் மூடப்பட்ட பெக்கியோ உணவுக் கூடம் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியது. எனினும், அது வழக்கநிலைக்கு திரும்பவில்லை. உணவங்காடி முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு விட்டதால் அங்கே உண்பதற்கு கவலை யில்லை என்று வாடிக்கையாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சியிடம் தெரிவித்தனர்.

180 பேருக்கு வயிற்று உபாதை ஏற்பட்ட பிறகு, ஓவன் சாலையில் உள்ள உணவங்காடி முழுமையாகச் சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டு நாட்கள் மூடப்பட்டது. இரு நாட்களும் கடை உரிமை யாளர்களும் துப்புரவு ஊழியர்களும் உணவங்காடியின் சுவர்களையும் கழிவறைகளையும் கழுவிச் சுத்தப் படுத்தினர். பறவை, எலிகளின் தொல்லையிலிருந்து விடுபட தஞ்சோங் பகார் நகர் மன்றமும் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. பலருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

சுத்திகரிப்பு பணிகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பெக் கியோ உணவங்காடி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

9 கூண்டுகளில் அடைக்கப்பட்டு படகு மூலம் கடத்தப்பட்டபோது நாய்க்குட்டிகள் குரைக்கும் சத்தம் காட்டிக்கொடுத்தது. படம்: ஏவிஏ

20 Jun 2019

ஜோகூரிலிருந்து கடல் வழியாக 23 நாய்க் குட்டிகளை கடத்திவர முயன்றவருக்கு சிறை