பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கிய பங்ளாதே‌ஷியர் மீது குற்றச்சாட்டு

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்ட ஆறு பங்ளா தே‌ஷியர் மீது பயங்கரவாதத் திற்கு நிதியுதவி செய்ததாக நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. மார்ச் மாத பிற்பாதியிலும் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலும் கைதான எட்டுப் பேரில் அந்த அறுவரும் அடங்குவர். இவர் கள் 26 முதல் 31 வயதுக்கு உட்பட்டவர்கள். ‘பங்ளாதே‌ஷின் இஸ்லாமிய நாடு’ என்ற அமைப்பைச் சேர்ந்த அவர்கள் தங்களது தாய்நாட்டில் பயங் கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு அங்குள்ள அர சைக் கவிழ்க்கத் திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டது. பங்ளாதே‌ஷில் இஸ்லாமிய நாட்டை அமைத்து, அதை ஐஎஸ் அமைப்பின் ஆளுமைக் குட்பட்ட பகுதியாகக் கொண்டு வருவதே அவர்களது குறிக் கோள் எனக் கூறப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியதாக அல்லது நிதி திரட்டியதாக அந்த அறுவர் மீதும் பயங்கரவாத (நிதியுதவித் தடுப்பு) சட்டத்தின்கீழ் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. ரஹ்மான் மிஸானுர், 31, மமுன் லியாகத் அலி, 29, மியா ரூபெல், 26, ஸாமன் தௌலத், 34, முகம்மது ஜபாத் ஹாஜே நோருல் இஸ்லாம் சௌடகர், 30, சொஹெல் ஹௌலதர் இஸ்மாயில் ஹௌலதர், 29, ஆகி யோரே அந்த அறுவர். ரஹ்மான் மிஸானுர்தான் அந்தக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார் என்று கடந்த மாதம் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

9 கூண்டுகளில் அடைக்கப்பட்டு படகு மூலம் கடத்தப்பட்டபோது நாய்க்குட்டிகள் குரைக்கும் சத்தம் காட்டிக்கொடுத்தது. படம்: ஏவிஏ

20 Jun 2019

ஜோகூரிலிருந்து கடல் வழியாக 23 நாய்க் குட்டிகளை கடத்திவர முயன்றவருக்கு சிறை