பாதுகாப்பில் எல்லாருக்கும் பொறுப்பு - சண்முகம்:

பயங்கரவாதத் தாக்குதல் இப் போது நாம் எதிர்நோக்கும் தெள் ளத்தெளிவான ஒரு மிரட்டலாக இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரி வித்துள்ளார். “உலகத்தைப் பாருங்கள். இந்த வட்டாரத்தைப் பாருங்கள். மலேசியா, இந்தோனீசியா, சிங்கப் பூர் நாடுகளில் இடம்பெறும் கைது நடவடிக்கைகளைப் பாருங்கள். பயங்கரவாத மிரட்டல் உள்ளது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்,” என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

பாரிஸ், ஜகார்த்தா நகர்களில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து சிங்கப்பூர் பலவற்றையும் கற்றுக்கொண்டிருக் கிறது என்று கூறிய அமைச்சர், என்றாலும் பயங்கரவாத மிரட்டல் என்பது பூனை, எலி பிரச்சனை யாகவே தொடர்ந்து இருந்து வருகிறது என்றார். பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சியை நேற்று பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிங்கப்பூரர் எல்லாரும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதே சிங்கப்பூர் பாதுகாப்பு (SGSecure) இயக்கம் உணர்த் தும் செய்தி,” என்று குறிப்பிட்டார். “தாக்குதல் நடந்தால் அவசர கால படைகள் விரைந்து வரும். என்றாலும் அவை வந்து சேர சில நிமிடங்களாவது ஆகும்.

உற்பத்தித் துறை ஊழியரான திருவாட்டி தீபா சிங்காரம் (இடது), அவருடைய புதல்வி ஐஸ்வர்யா ஐயப்பன், 8, இருவரும் சொங் பாங் தொகுதி நெருக்கடிகால ஆயத்தநிலை நாள் பயிற்சியின்போது செயற்கை சுவாசம் உள்ளிட்ட முதலுதவி தேர்ச்சிகளைக் கற்றறிந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்