தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் இலங்கை - சிங்கப்பூர் நாட்டம்

இலங்கை=சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு ஒன்றை அமலாக்குவதில் இரு நாடுகளும் நாட்டத்துடன் இருப்பதாக அறி விக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை= சிங்கப்பூர் தொழில்துறை கருத் தரங்கில் உரையாற்றிய சிங்கப் பூரின் வர்த்தக தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இதனை அறிவித்தார். அந்தக் கருத்தரங்கில் இரு நாடுகளையும் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. பரந்த அடிப்படையி லான தடையற்ற வர்த்தக உடன் பாட்டை அமலாக்கினால் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை உண்டு என்று அந்த கருத்தரங் கிற்கு முன்னதாக சந்தித்த சிங்கப் பூர் அமைச்சரும் இலங்கை அனைத்துலக வர்த்தக அமைச்சர் மாலிக் சாமரவிக்ரமாவும் ஒப்புக் கொண்டனர்.

அது பற்றி ஆராயும்படி தங்கள் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர். சரக்குகள், சேவை, முதலீடு, அரசாங்க கொள் முதல் ஆகியவற்றில் இடம்பெறக் கூடிய வர்த்தகக் கடப்பாடுகளை அந்த உடன்பாடு உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இலங்கை - சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் பொருளி யல் உறவுகளை ஆழமாக்கும். “இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இடையில் தொடர்புகளை அதிகமாக்கவும் முதலீடுகளைப் பெருக்கவும் இருதரப்பு வர்த்த கத்தை வளர்க்கவும் இரு நாடுகளின் அரசாங்கங்களும் உறுதி பூண்டுள்ளன என்பதற்கு அடை யாளமாக இது திகழ்கிறது,” என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்

பயங்கரவாதத் தாக்குதலில் தப்பியவர்களையும் மாண்டோரின் குடும்பத்தாரையும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் சந்தித்து ஆறுதல் கூறினார். படம்: இபிஏ

17 Mar 2019

ஆஸ்திரேலியர் மீது கொலைக் குற்றச்சாட்டு