இலங்கை திரிகோணமலையில் ஈஸ்வரன்

சிங்கப்பூரின் வர்த்தக தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இலங்கைக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இலங்கையில் தொழில் வாய்ப்புகளைக் கண்டறியவும் அமைச்சர் அந்த நாட்டுக்குச் சென்றிருந்தார். பல தலைவர்களைச் சந்தித்தார். சிங்கப்பூர் அமைச்சர் நேற்று திரிகோணமலை சென்று அங்கு சிங்கப்பூரின் பிரிமா சிலோன் மாவு ஆலை வளாகத்தைப் பார்வையிட்டார். கிழக்கு மாநில முதலமைச்சர் அகமது நாசீரையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தப் பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக உடன்பாடு பற்றி ஆராய இணக்கம் காணப்பட்டது.

திரிகோணமலையில் இருக்கும் ஓர் இந்துக் கோயிலில் அமைச்சர் எஸ் ஈஸ்வரன், (வலது) இலங்கை கிழக்கு மாநில முதலமைச்சர் அகமது நாசீர், (நடு) இலங்கை அனைத்துலக வர்த்தக அமைச்சர் மாலிக் சாமரவிக்ரம ஆகியோர். படம்: வர்த்தக தொழில் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!