நியூசிலாந்தில் வாகன விபத்து; சிங்கப்பூரருக்கு 4 மாத வீட்டுக்காவல், $25,400 அபராதம்

நியூ­சி­லாந்­தில் விடு­முறையைக் கழிக்­கச் சென்­றி­ருந்த 30 வயது சிங்கப்­பூ­ரர் மோசமான விபத்து ஒன்றை ஏற்­படுத்திய­தற்­காக நான்கு மாதங்களுக்கு வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­ட­து­டன் 200 மணி நேர சமூகப் பணிக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளார். லியூ வெய் கியோங் எனும் அந்த ஆட­வ­ரின் ஓட்­டு­நர் உரிமம் ரத்து செய்­யப்­பட்­ட­து­டன் அவ­ருக்கு $25,400 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி பெண் நண்பர் ஒரு­வ­ரு­டன் நியூ­சி­லாந்­தின் சவுத் ஐலாண்­டுக்கு சுற்றுலா சென்­றி­ருந்த அவர் டொயோட்டா கோரொல்லா கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணம் செய்­த­போது நான்கு வாக­னங்­கள் மோதிக்­கொண்ட விபத்­துக்­குக் கார­ண­மானார். அந்த விபத்­தில் மோட்டார் சைக்­கி­ளோட்டி கிரெய்க் ஆலன் சேம்பர்ஸ், 39, மர­ண­மடைந்தார். மணிக்கு 120கி.மீ. வேகத்­தில் காரை ஓட்டிச் சென்றதாக லியூ மீது நீதி­மன்றத்­தில் குற்றம் சாட்­டப்பட்­டது.

காரை ஓட்டிச் சென்ற லியூ களைப்­பினால் தூங்­கி­விட்­ட­தா­க­வும் என்ன நேர்ந்­த­தென்று நினை வில் இல்லை எனவும் குறிப்­பிட்­ட­தாக நீதி­மன்றத்­தில் கூறப்­பட்­டது. விபத்­தில் மாண்­டு­போ­ன­வ­ரின் மனைவி நிகோலா நேற்று நீதி­மன்றத்­திற்கு வந்­தி­ருந்து, தமது பிள்ளை தந்தையை இழந்த­தற்­கும் தாம் விதவை­யா­ன­தற்­கும் லியூ மட்டுமே காரணம் என்று குறிப்­பிட்­ட­தோடு தமது குழந்தை தந்தை­யின் இழப்­பால் பெரிதும் வாடு­வ­தா­க­வும் மிகுந்த மன வேதனை­யு­டன் கூறினார்.

வாடகை டொயோட்டா கார் ஒன்றை நியூசிலாந்தில் ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் லியூ வெய் கியோங் இரட்டை மஞ்சள் கோடு­­­களைத் தாண்டி சில வாக­­­னங்களை முந்­­­திச்­­­செல்ல விழைந்த­­­போது இரண்டு கார்கள், எதிர்த்­­­திசை­­­யில் பயணம் செய்­­­து­­­கொண்­­­டி­­­ருந்த மோட்டார் சைக்கிள் ஆகி­­­ய­­­வற்­­­றின்­­­மீது மோதினார். படம்: @GUNNY_NZ/INSTAGRAM

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!