‘மகிழ்ச்சியான குடும்பங்கள் நல்லிணக்கத்தை வளர்க்கும்’

வில்சன் சைலஸ்

மகிழ்ச்சியான குடும்பங்கள் நமது நாட்டிற்கும் சமுதாயத்திற் கும் முக்கிய தூணாகத் திகழ் வதால் குடும்ப தினம் போன்ற கொண்டாட்டங்கள் முக்கியமா னவை என்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அவை உதவியாக உள் ளன என்றும் வர்த்தகத் தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ் வரன் கூறியுள்ளார்.

டௌன்டவுன் ஈஸ்ட்டில் நேற்று மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாடு செய்த குடும்ப கேளிக்கை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு ஈஸ்வரன், "சிங்கப்பூரின் சமுதாயத்திற்கு குடும்பம்தான் அஸ்திவாரம். நல்ல உறவுகள் நமது நாட்டிற்கு முக்கிய தூண்," என்றார். பல்வேறு பொறுப்புகளால் ஒருவரோடு ஒருவர் நேரம் செலவிட முடியாத பெற்றோர் பிள்ளைகளால் இது போன்ற தருணங்களில் ஒன்றிணைந்து தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ள இதுபோன்ற குடும்ப தின நிகழ்ச்சிகள் வாய்ப்புகள் அளிக்கின்றன என்றார் அவர்.

மக்கள் கழக நற்பணிப் பேரவை நேற்று நடத்திய குடும்ப கேளிக்கை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் அங்கு இருந்த சிறுவர்களுடன் உரையாடுகிறார். படம்: மக்கள் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!