தந்தையை மன்னித்த ஜப்பானிய சிறுவன்

தோக்கியோ: ஜப்பானில் அடர்ந்த காட்டுக்குள் 7 வயதுச் சிறுவனை தனியாக விட்டுச்சென்ற அச் சிறுவனின் தந்தை, தன் மகன் தன்னை மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளார். காட்டுக்குள் 6 நாட்களாகத் தவித்த யமாட்டோ டனூக்கா என்ற சிறுவன் மூன்று நாட்களுக்கு முன்பு பத்திரமாக மீட்கப்பட்டான். அவனது உடல்நிலையை சோதிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அச்சிறுவன் நேற்று அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிச்சென்றான். ஏழு வயதுச் சிறுவனை தனியாக காட்டில் விட்டதற்காக அச்சிறுவனின் பெற்றோர் மீது குற்றம் எதுவும் சாட்டப்படாது என்று போலிசார் கூறினர்.

குறும்புத்தனம் செய்தான் என்பதற்காக அவனை காட்டிற்குள் தனியாக விட்டுச்சென்ற அவனது பெற்றோர் மீது ஜப்பானில் பலர் சினம் கொண்டுள்ள வேளையில் அவனது பெற்றோர் குற்றச்சாட்டு களை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று போலிசார் தெரிவித் துள்ளனர். முதலில் அவனது பெற்றோர், குடும்ப சுற்றுலா சென்றிருந்தபோது தன் மகனைக் காணவில்லை என்று போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அச்சிறுவன் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது கற்களை வீசி குறும்புத்தனம் செய்தான் என்பதற்காக அவனைத் தண்டிப்பதாக நினைத்து தனியாக விட்டுச்சென்றனர். பசியுடன் காட்டில் சுற்றித்திரிந்த அச்சிறுவன் பாழடைந்த ஒரு குடிசைக்குள் படுத்துறங்கியபோது ஜப்பானிய வீரர் ஒருவர் அவனை அடையாளம் கண்டு கொண்டதைத் தொடர்ந்து அவன் மீட்கப்பட்டான்.

ஜப்பானிலுள்ள ஒரு காட்டில் 6 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட 7 வயதுச் சிறுவன் யமாட்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். அவன் நேற்று அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்றான். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனியார் குடியிருப்பான ‘பிரேடல் வியூ’ 1.14 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

‘பிரேடல் வியூ’: விற்பனைக்கு வருகிறது ஆகப்பெரிய தனியார் குடியிருப்பு

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்