யங்கோனில் வாழ்க்கைத் தொழில் பயிற்சிக் கழகம்

மியன்மாரிலிருந்து தமிழவேல்

மியன்மாரின் மையப்பகுதியில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல் விக் கழக பாணியிலான ஒரு புதிய கல்விக் கழகம் சிங்கப்பூர், மியன்மார் ஆகிய இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டு உள்ளது. யங்கூனில் சிங்கப்பூர்-மியன் மார் வாழ்க்கைத் தொழில் கல்விக் கழகத்தை (எஸ்எம்விடிஐ) பிரதமர் லீ சியன் லூங் நேற்று அதிகாரபூர்வ மாகத் திறந்து வைத்தார்.

மியன்மாரின் வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்கு நேரடியாக பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்கும் நோக்கில் இந்தக் கல் விக் கழகம் நிறுவப்பட்டுள்ளது. பயிற்சிகளை முடித்த மாணவர் களுக்குத் தகுந்த வேலைகளையும் அமைத்துக் கொடுக்கிறது கல்விக் கழகம். புதிய, நவீன கல்விக் கழகத் தின் புதுப்பிப்புப் பணிகளுக்கான செலவுகளை சிங்கப்பூர் ஏற்று கடந்த ஆண்டு 2015ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின. கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்தையும் நிர்வாகத்தையும் மியன்மாரின் தேவைகளுக்கு ஏற்ப உயர் தரத் தில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி சேவைகள் கவனித்து வருகின்றன.

ஆண்டுக்கு இருமுறை என ஒவ்வோர் ஆண்டும் 800 மாணவர்களை கல்விக் கழகம் ஏற்கும். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் கல்விக் கழகம் அதன் முதல் மாணவர்களை ஏற்றது. சேவை பயணத்துறைப் பள்ளியில் 156 மாணவர்களும் பொறியியல் பள்ளி யில் 225 மாணவர்களும் சேர்ந்து படித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.

யங்கோனில் நேற்றுக் காலை பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) சிங்கப்பூர்-மியன்மார் வாழ்க்கைத் தொழில் பயிற்சிக் கழகத்தில் உள்ள வசதிகளைப் பார்வையிட்டார். படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!