வெள்ளத் தடுப்புப் பணி பாதி நிறைவு

ஆர்ச்சர்ட் ரோட்டில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க பொதுப் பயனீட்டுக் கழகம் மேற்கொண்டு வரும் பெரும் பணியில் சுமார் பாதி முடிவடைந்திருக்கிறது. வெள்ளநீரைத் திருப்பிவிடு வதற்கான ஸ்டாம்போர்டு கால் வாயும் ஸ்டாம்போர்டு நீர்த்தேக் கக் கிணறும் ஸ்டாம்போர்டு கால் வாயில் செல்லும் தண்ணீரை 30% குறைக்கும் என்று இந்தக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆர்ச்சர்ட் ரோட்டில் இந்தக் கால்வாயே இருமருங்கிலும் ஓடு கிறது. வெள்ளநீரைத் திருப்பி விடும் கால்வாய்ப் பணியில் கிட்டத்தட்ட பாதி முடிவடைந்து விட்டது. இந்தக் கால்வாய் ஸ்டாம்போர்டு கால்வாயில் பாயும் தண்ணீரை ஒரு பகுதி குறைத்து விடும்.

இதேபோல வெள்ளநீரைத் தேக்க உதவும் கிணறும் பாதி கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இந்தக் கிணறு வெள்ளநீரைத் தற்காலிகமாகத் தேக்கி அதன் மூலம் ஸ்டாம்போர்டு கால்வாய்க் குள் வெள்ளநீர் அதிகம் புகு வதைத் தடுத்துவிடும். வெள்ளநீரைத் திருப்பிவிடும் கால்வாய் 2 கிமீ. நீளமுள்ளது.

அது இரண்டு பாதாள சுரங் கங்கள் வழியாகவும் வடிகால் மூலமாகவும் சிங்கப்பூர் ஆற்றுக் குள் தண்ணீரைத் திருப்பிவிடும் என்று நீர்த்தேக்க, நீர்வழித்துறை இயக்குநர் ரிட்சுவான் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். இக்கால்வாய் 2018 முதல் காலாண்டில் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள நீரைத் திருப்பி விடுவதற்கான ஸ்டாம்போர்டு கால்வாய், ஸ்டாம்போர்டு வெள்ள நீர்தேக்கக் கிணறு இரண்டும் ஸ்டாம்போர்டு கால்வாய்க்கு வரும் தண்ணீரை 30% குறைக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!