நடை, சைக்கிளோட்டம்: முதல் மாதிரி நகராக அங் மோ கியோ

நடை, சைக்கிளோட்டம் ஆகிய வற்றுக்கான மாதிரி நகராக அங் மோ கியோ உருவெடுக்கிறது. அதற்கான பிரத்தியேக பாதைகள் சிவப்பு வண்ணத்தில் தயார் செய்யப்படுகின்றன. அங் மோ கியோ அவென்யூ 1, அவென்யூ 3 ஆகியவற்றில் சைக்கிளோட்டத்திற்கென தனி யாக இரண்டு பாதைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் அமைத்துள்ளது. சிங்கப்பூரிலேயே சிவப்பு வண் ணத்தில் உருவாகி இருக்கும் முதல் சைக்கிளோட்ட பாதைகள் இவைதான். அங் மோ கியோவை நடப்பதற்கும் சைக்கிளோட்டுவ தற்கும் மாதிரி நகராக உருமாற் றும் திட்டத்தின் ஒரு பகுதி இது.

இதற்கான திட்டத்தை நிலப் போக்குவரத்து ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் கடந்த 2014 டிசம்பரில் அறிவித் தன. பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கின. நேற்று முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள அந்தப் பாதை களின் நீளம் சுமார் 1.5 கிலோ மீட்டர். இவை தவிர அங் மோ கியோ அவென்யூ 1, அவென்யூ 3, அவென்யூ 8 ஆகியவற்றின் வழி யாக சுற்றுப்பாதையை அமைக்கும் பணி வரும் ஜூலையில் நிறை வடையும் என ஆணையம் எதிர் பார்க்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!