சிங்கப்பூர் கூட்டு விமான நிறுவனம் பலனடையும்

விமானப் போக்குவரத்துத் துறை யில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் உள்நாட்டு விமா னங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதி கரித்து வருகிறது. வரும் 2022ஆம் ஆண்டில் உலகின் விமானத்துறையில் மூன் றாம் இடத்தைப் பிடிக்க இந்தியா முயன்று வருகிறது. அதற்கு உத வியாக அது தனது விமானப் போக்குவரத்துக் கொள்கையில் முக்கிய மாற்றங்களைச் செய்துள் ளது. கடந்த 18 மாதங்களாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளைத் திரட்டி விமானப் போக்குவரத்துத் துறை உருவாக்கிய கொள்கை அறிக்கையை இந்திய அமைச் சரவை நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டது. இந்தக் கொள்கையில் 5/20 என்னும் விதியை புதிய நிறுவனங் களுக்குச் சாதகமாகத் திருத்தி இருப்பதுதான் முக்கியமான மாற் றம். எந்த ஒரு விமான நிறுவனமாக இருந்தாலும் அது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு உள்நாட்டு விமானச் சேவையை வழங்கிய தோடு அதன்வசம் குறைந்தபட்சம் 20 விமானங்கள் இருக்க வேண் டும் என்பது 5/20 விதி.

புதிய கொள்கையின்படி ஐந்து ஆண்டு உள்நாட்டு விமானச் சேவை என்பது கட்டாயமாக்கப்பட வில்லை. இதனால், சிங்கப்பூர் ஏர்லைன்சும் டாடா குழுமமும் இணைந்து உருவாக்கிய விஸ் தாரா, ஏர் ஏ‌ஷியா போன்ற புதிய விமான நிறுவனங்கள் பலனடை யும். இருப்பினும், விமான எண் ணிக்கை என்பதில் சிறிய மாற்றமே செய்யப்பட்டுள்ளது. 20 விமானங் கள் அல்லது மொத்த உள்நாட்டு விமானச் சேவையில் 20 விழுக் காடு, இதில் எது அதிகமோ அதனைப் பின்பற்றலாம் என்கிறது புதிய கொள்கை. அதன்படி பார்த் தால் குறைந்தபட்சம் 20 விமா னங்களை வைத்திருந்தால் மட்டுமே வெளிநாட்டுப் பயணச் சேவைக்கு அனுமதி கிட்டும். ஐந்தாண்டு சேவை என்பதில் விலக்கு அளிக்கப்பட்டாலும் 20 விமானங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் புதிய நிறு வனங்கள் பலனடைய நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப் படுகிறது. காரணம், தற்போது அவற்றிடம் குறைந்த எண்ணிக்கை யிலான விமானங்களே உள்ளன.

ஏர் ஏ‌ஷியாவை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் உள் நாட்டுச் சேவையில் ஆறு விமா னங்களை மட்டுமே அது இயக்கு கிறது. 20 விமானங்களாக இதன் எண்ணிக்கையை உயர்த்த கடுமை யாக முயற்சி செய்யப்போவதாக ஏர் ஏ‌ஷியா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமர் அப்ரோல் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!