புக்கிட் பாத்தோக்: நடைபாதைக் கூரையைச் சாய்த்த பாரந்தூக்கி

புக்கிட் பாத்தோக்கில் திறந்தவெளி கார் பேட்டை ஒன்றில் நடைபாதைக் கூரை ஒன்று நேற்றுக் காலை சாய்ந்துவிட்டது. அதனால் ஒரு கார் நசுங்கி விட்டது. அந்தக் காட்சியைக் காண பலரும் கூடிவிட்டனர். பாரம் தூக்கிச் சாதனத்துடன் இருந்த ஒரு லாரி அந்த நடைபாதை கூரையை இடித்துத் தள்ளிவிட்ட தாகத் தெரிகிறது. அந்த நடைபாதைக் கூரை புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் இருக்கும் 116வது புளோக்கையும் 118வது புளோக் கையும் இணைக்கும் ஒன்றாக இருந்தது.

சம்பவத்தைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 60க்கும் மேல் என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் வேறு எந்த வாகனமும் ஈடுபடவில்லை. யாருக் கும் காயமில்லை. கார்பேட்டை யிலிருந்து தன்னுடைய லாரியை வெளியே ஓட்டி வந்த அந்த லாரி ஓட்டுநர், தன் வாகனத்திலிருந்த பாரந்தூக்கிச் சாதனத்தைக் கீழே இறக்கி அதை மடிக்க மறந்து விட்டார் என்று ஜூரோங் நகரமன்ற தலைமை நிர்வாகி ஹோ தியான் போ கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்றுத் தெரிவித்தது. பாரந்தூக்கி நீட்டிக்கொண் டிருந்தபடியே லாரி வந்ததால் அந்தப் பாரந்தூக்கி நடைபாதை கூரையில் இடித்துவிட்டது.

புக்கிட் பாத்தோக் அவென்யூ 6ல் இருக்கும் புளோக் 118ல் கீழே சாய்ந்துவிட்ட நடைபாதைக் கூரை. ஒரு கார் நசுங்கி சேதமடைந்துவிட்டது. பாரந்தூக்கி லாரி இடித்ததே காரணம் என்று தெரியவந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!