திடீர் வெள்ளம்: 11 பேர் மீட்பு

ஜூரோங் வெஸ்ட் எண்டர்பிரைஸ் ரோட்டில் நேற்று முன்தினம் ஏற் பட்ட திடீர் வெள்ளத்தில் மூன்று வாகனங்களில் சிக்கியிருந்த 11 பேரை சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படையினர் பத்திரமாக மீட் டனர். அப்பகுதியில் பெய்த பெருமழை யால் பேருந்து, லாரி, கார் ஆகிய மூன்று வாகனங்களில் சிக்கிக் கொண்ட அவர்கள் பாதுகாப்பாக அவற்றிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
அந்த வாகனங்களுக்குள் முழங்கால் உயரத்திற்குத் தண்ணீர் புகுந்தது.

அந்த வாகனங்களில் சிக்கி யிருந்தோருக்குக் குடிமைத் தற் காப்புப் படையினர் உயிர்காப்பு அங்கிகளை வழங்கி அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் தெசா ஹுயியிங் பதிவேற்றம் செய்த படங்களில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வெள்ளத்தில் நடந்து பாதிக்கப்பட் டவர்களைக் காப்பாற்றுவது தெரிந்தது.
தாம் பயணம் செய்த பேருந் தின் ஓட்டுநர் வெள்ளத்தில் பேருந்தைச் செலுத்தாத சரியான முடிவை எடுத்தார் என்று கூறி னார் அந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஒருவரான குமாரி தெசா ஹுயியிங்.

"பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து எங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் அது அவரது தவறல்ல என்று நம் பிக்கையூட்டினோம்.
"உண்மையில் சொல்லப் போனால் நாங்கள்தான் அவருக்கு நன்றி கூற வேண்டும்," என்று குமாரி ஹுயியிங் தமது ஃபேஸ் புக் பதிவில் எழுதியிருந்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பேருந்துக்குள் இருந்த பயணிகளை அப்புறுத்தப்படுத்திய பிறகு, பேருந்தைச் சோதிக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட லாரியில் இருந்தவர்களையும் காப்பாற்ற முனைகின்றனர். படங்கள்: தெசா ஹுயியிங்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!