பாசிர் ரிஸ்ஸில் புதிய விளையாட்டு நூலகம்

பாசிர் ரிஸ்ஸில் விளையாட்டு-க் கூட நூலகம் புதிதாக திறக்கப் பட்டிருக்கிறது. பாசிர் ரிஸ் இலையஸ் சமூக மன்றத்தில் திறக்கப்பட்டிருக்கும் அந்த நூல கத்தில் விளையாட்டு அறை உள்ளது. அதில் ரிமோட் கார்கள் உள்ளிட்ட சுமார் 50 விளையாட்டுச் சாதனங்கள் இடம்பெற்று இருக் கின்றன. சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகள், தங்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடி வமைக்கப்பட்டிருக்கும் விளை யாட்டுச் சாதனங்களுடன் அந்த அறையில் விளையாடி மகிழலாம்.

அதேவேளையில் வழக்கமான பள்ளி மாணவர்களின் தேவை களையும் அந்த நூலகம் நிறை வேற்றும். வடகிழக்கு சமூக மேம் பாட்டு மன்றமும் சிபிஏஎஸ் (CPAS), என்ற அமைப்பும் சேர்ந்து அமைத்துள்ள அந்த நூலகம், வழக்கமான பள்ளிப் பிள்ளைகளுக் கும் சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கும் இடையிலான தடைகளை விளையாட்டுகள் வழியாக நீக்குவதைக் குறிக் கோளாகக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட முதலாவது விளையாட்டுக்கூட நூலகம் இதுவே என்று நம்பப் படுகிறது.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் பாசிர் ரிஸ் புதிய நூலகத்தில் ஹாசல் என்ற 21 மாத சிறுமியுடன் கலந்து உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்