கர்நாடகத்தில் 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தில் வரும் 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப் பற்றுவதற்கான முயற்சிகளில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்கு உதவி யாக முன்னாள் முதல்வர் எடியூ ரப்பாவை மாநில பாஜக தலை வராக அக்கட்சியின் மேலிடம் நியமித்துள்ளது-. அதனைத் தொடர்ந்து, கர்நாட கத்தில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி தனது ஆட் சியைத் தக்கவைத்துக்கொள்வ தற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. அதன் ஒருபகுதியாக அமைச்சர்களை களையெடுக்கத் தொடங்கியுள்ளது. சரியாகச் செயல்படாதவர்கள், சர்ச்சைகளில் சிக்கியோர், ஊழல் புகார்களில் சேர்க்கப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத் திடம் முதல்வர் சித்தராமையா சமர்ப்பித்தார். அவரது ஆலோசனையை ஏற்ற காங்கிரஸ் தலைமை 14 அமைச் சர்களை அதிரடியாக நீக்க உத் தரவிட்டது. அவர்களுக்குப் பதில் புதிதாக 13 பேர் அமைச்சரவை யில் சேர்க்கப்பட்டனர். புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டது.

பதவி இழந்தவர்களில் சபா நாயகர் திம்மப்பாவும் நடிகர் அம்பரீ‌ஷும் குறிப்பிடத்தக்கவர் கள். பதவி பறிபோன அமைச்சர் களின் ஆதரவாளர்கள் பலரும் வன்முறையில் குதித்தனர். முதல் வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை அவர்கள் ஆங் காங்கே எரித்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர். பெங்களூரு, குல்பர்கா போன்ற இடங்களில் வாகனங்களை எரித்து பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் கர்நாடக மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. பல இடங்களில் சாலைப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பதவி இழந்த கம்ருல் இஸ் லாம் என்பவரின் ஆதரவாளர்கள் குல்பர்காவில் அரசு பேருந் துக்குத் தீ வைத்தனர். பதவி பறிக்கப்பட்ட மற்றொருவரான ஸ்ரீனிவாச பிரசாத் என்பவரின் ஆதரவாளர்கள் மைசூருவில் முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்தனர்.

மேலும் மாண்டியா அருகே பெங்களூரு=மைசூரு சாலை யில் திரண்ட நடிகர் அம்பரீஷ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தம்மிடம் இருந்த வீட்டு வசதி அமைச்சர் பதவி பறிக்கப்பட் டதைத் தொடர்ந்து நேற்று தமது எம்எல்ஏ பதவியை விட்டு அம் பரீஷ் விலகினார். பதவி கிடைக்காமல் ஏமாந்தவர்களின் ஆதரவாளர் களும் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூருவில் உள்ள விஜயநகர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணப்பா அமைச்சர் ஆக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், புதிய அமைச்சர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லாததால் அவரது ஆதரவாளர்கள் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர்.

அமைச்சர் பதவியை இழந்தவர்களின் ஆதரவாளர்கள் மைசூரு சாலையில் முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மையை எரித்தனர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!