உடற்குறையாளருக்கு உதவ புதிய ஊட்ரம் பல் மருந்தகம்

முதியோர், சிறப்புத் தேவை உடைய நோயாளிக்குச் சிகிச்சை அளிப் பதற்காக சிங்கப்பூரில் முதலாவது பல் மருந்தகம் நேற்று அதிகார பூர்வமாகத் திறக்கப்பட்டது. ஊட்ரம், சிங்கப்பூர் தேசிய பல் சிகிச்சை நிலையத்தில் அந்த புதிய பல் மருந்தகம் செயல்படு கிறது. சிக்கலான மருத்துவ சிகிச் சைகள் தேவைப்படும் நோயாளி களுக்காகவே வடிவமைக்கப்பட்ட முழுமையான பல பல் சிகிச்சை சேவைகளை அது வழங்கும். உடற்குறையாளர்கள், அறிவு மந்தக் குறைபாடு உள்ளவர்கள் ஆகியோரின் பல் மருத்துவத் தேவைகளையும் அது நிறைவேற் றும். புதிய மருந்தகம் நடமாட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கும் உதவும் வகையில் இருக்கிறது.

இது சென்ற செப்டம்பர் முதல் செயல்படத் தொடங்கியது. இது வரையில் 4,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கியிருக்கிறது. அவர்களில் பலரும் சிக்கலான பல் பிரச்சினை களைக் கொண்டவர்கள். இந்த மருந்தகத்தில் நோயாளிகளின் பல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளித்து அவர்கள் நிலைமை சீரடைந்ததும் அவர்கள் தங்கள் பல் சுகாதாரப் பராமரிப்பு மருத்துவரிடம் அனுப்பப்படுவார் கள். அங்கு அவர்கள் வழக்கமான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள் வார்கள் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார். இவர் மருந்தகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

சிக்கலான சிகிச்சை தேவைப்படுவோருக்கு எல்லா வகை பல் நல சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் சிறப்பு பல் மருந்தகம் ஊட்ரமில் செயல்படுகிறது. இது முதியோர், சிறப்பு உதவி தேவைப்படு வோருக்குச் சேவைகளை வழங்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!