வெளிநாடுகளிலும் விரிவடைய நிறுவனங்களுக்கு வலியுறுத்து

சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்நாட் டிலேயே வளர்ச்சி காண்பது நீண்டகாலபோக்கில் மெதுவாகத் தான் இருக்கும் என்பதால் நிறு வனங்கள் வெளிநாடுகளுக்கு விரிவடைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் பொருளியலைப் பொறுத்தவரையில் நீண்டகாலத் திற்கு குறைவான வளர்ச்சி என்பதே உண்மை நிலவரமாக ஆகி வருகிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் லிம் ஹங் கியாங் தெரிவித்து உள்ளார். ஆகையால் நிறுனங்கள் வெளி நாடுகளில் கண்வைக்க வேண்டும் என்று ஹியுமன் கேப்பிட்டல் சிங் கப்பூர் அமைப்பு ஏற்பாடு செய்த அனைத்துலகமய கருத்தரங்கில் உரையாற்றியபோது அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் செயல்படும் நிறு வனங்களுக்கு நீண்டகாலபோக் கில் வளர்ச்சி குறைவாக இருக் கும் என்று அவர் எச்சரித்தார். ஆகையால் நிலையான வளர்ச் சியை நிறுவனங்கள் சாதிக்க வேண்டும் என்றால் அவை புதிய, பலதுறை சந்தைகளில் விரிவடைய வேண்டும் என்றும் அவை அனைத்துலக அளவில் விரி வடைந்து பலனடைய வேண்டும் என்றும் திரு லிம் குறிப்பிட்டார். நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவடைய அரசாங்கம் ஆதரவு தருகிறது. ஐஇ சிங்கப்பூர் வர்த்தக அமைப்பின் 'சந்தை ஆயத்த உதவித் திட்டம்' போன்ற உதவி களை நிறுவனங்கள் நாடலாம்.

அனைத்துலகமய கருத்தரங்கின் திறப்பு விழாவில் அமைச்சர் லிம் ஹங் கியாங் (இடமிருந்து 5வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!