பிரிட்டிஷ் பிரதமர் விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்திருப்பதைத் தொடர்ந்து பிர தமர் பதவியைவிட்டு விலகப் போவதாக டேவிட் கேமரன் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடத் தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவு கள் நேற்று வெளியிடப்பட்டன. வெளியேறுவதை ஆதரித்து 51.9 விழுக்காடு வாக்குகளும் எதிர்த்து 48.1 விழுக்காடு வாக்குகளும் போடப்பட்டன. வெளியேறுவது என்று 17.4 மில்லியன் மக்களும் வேண்டாம் என்று 16.1 மில்லியன் பேரும் வாக்களித்தனர்.

இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த முடிவு குறித்து சற்று நேரத்தில் பிரதமர் உரை நிகழ்த்துவார் என்று பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் ஃபிலிப் ஹேமண்ட் கூறிச் சென்றபடியே 10 டவுனிங் ஸ்திரீட்டுக்கு வெளியே பிரதமர் டேவிட் கேம ரன் மக்களிடம் உரையாற்றி னார். பிரதமர் பதவியைக் கைவிட விருப்பம் தெரிவித்த அவர் பிரிட்டனுக்குப் புதிய தலைமைத் துவம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

28 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய ஒன்றி யத்திலிருந்து விலகுவதால் பொருளியல் பேரிடரை பிரிட்டன் சந்திக்க நேரிடும் என்று அவர் இதற்கு முன்னர் எச்சரித்திருந்தார். இருப்பினும், அக்டோபர் மாதம் புதிய பிரதமர் தேர்ந் தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிக்கப்போவதாகவும் அவர் சொன்னார். பிரிட்டனில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரிய மாற்றங்களைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு 31 ஆண்டு காணாத சரிவைச் சந்தித்தது. நேற்று ஒரே நாளில் அதன் மதிப்பு 10% வீழ்ந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!