அமைச்சர் ஓங்: நல்ல கேள்விகளைக் கேளுங்கள்

மாணவர்கள் வரும் 2017ஆம் ஆண்டு தொடக்கம் முதல் கூட்டுறவுத் திட்டங்களில் பங்கேற்பதால் வேலை செய்துகொண்டே பட்டக்கல்வியில் கவனம் செலுத்தலாம் என்று தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்தரங்கு 2016'ல் திரு ஓங் சிறப்புரை ஆற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், 'சிம்' பல்கலைக்கழகம் ஆகியவை சிங்டெல், சிங்கப்பூர் பவர், 'தி எஸ்கோட்', 'கெபிடலாண்ட்', 'ஸ்டான்டர்ட் சார்டர்ட்' வங்கி, தற்காப்பு அறிவியல் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த முன்னோடித் திட்டத்தை நடத்துகின்றன. "உயர்கல்வி நிலையங்கள் வெறுமனே மாற்றங்களைப் பின்பற்றாமல் தலைமையேற்றுச் செல்லும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். சமூக, பொது இலக்குகளை மைய மாக வைத்து உயர்கல்வி நிலையங் களில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். அது திறன்கள், அறிவு, அடையாளம் ஆகியவற்றின் அடிப் படையில் அமைந்திருக்க வேண் டும்," என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.

"இதனை அடைய வேண்டுமானால், மாணவர்களுக்கு கல்வி அறிவுடன் தொழில்நுட்பத் திறன்களும் இருக்க வேண்டும். அவர்கள் நல்ல பதில்களைக் கூறு வதோடு மட்டுமல்லாமல் நல்ல கேள்விகளைக் கேட்கக்கூடியவர்களாக உருவாக்கப்பட வேண்டும்," என்றும் திரு ஓங் வலியுறுத்தினார்.

'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்தரங்கு 2016'ல் கலந்துகொள்வதற்கு முன்னர் மாணவர்களுடன் உரையாடிய தற்காலிக கல்வி அமைச்சர் ஓங் யி காங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!