‘ஆயுதப் படையின் முக்கிய அமைப்பு ராணுவ பயிலகம்’

சுதாஸகி ராமன்

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் ஒரு முக்கிய அமைப்பாக சாஃப்ட்டி ராணுவப் பயிலகம் திகழ்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இன்றைய, நாளைய சிஆபடை தலைவர்களை அது பயிற்சி அளித்து உருவாக்கிவருகிறது என்று அவர் குறிப்பிட்டார். சாஃப்ட்டியின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று அதி காரி பயிற்சிப் பள்ளியில் நடை பெற்ற ராணுவ அதிகாரி நியமன அணிவகுப்பில் 646 அதிகாரிகள் பங்கேற்றனர். பிரதமர் திரு லீ சியன் லூங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டு அணி வகுப்பைப் பார்வையிட்டார்.

50 ஆண்டுகளுக்கு முன் வெறும் இரண்டு காலாட் படைப்பிரிவு களுடன் இருந்த ஆயுதப்படை இன்று முச்சேவை யாக, 3ஜி போர்ப் படையாக மிளிர்வது அதனால்தான் என்று நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் குறிப் பிட்டார். தான் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான அதிகாரிகளுக்கு அப்பயிலகம் பயிற்சி அளித்துள்ள தாகவும் திரு லீ குறிப்பிட்டார். அதிகாரிகளாகப் பொறுப்பு ஏற்றுக்கொள்வோருக்கு நாடு எப்போதும் பாதுகாப்பாக இருப் பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். நேற்றைய நிகழ்ச்சியில் ஆணை பெற்ற அதிகாரிகளில் கிஷன் குமார் தமிழ்ச்செல்வனும் ஒருவர். ராணுவத் தளவாடங்களை நிர்வகிக்கும் பொறுப்பை இப்போது ஏற்றுக்கொண்டுள்ள இவர், தேசிய சேவை முடிந்த பிறகு சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பை மேற் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இடது படம்: ராணுவ அணிவகுப்பைப் பார்வையிடும் பிரதமர் லீ சியன் லூங். வலது படம்: ராணுவ அதிகாரியாக நேற்று பதவியேற்ற கிஷன்குமார் தமிழ்ச்செல்வன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!