‘அனைவரையும் ஒன்றிணைப்பதே நோக்கு’

­­­மு­ஹம்­மது ஃபைரோஸ்

பக்­தர்­களின் தேவை­களைப் பூர்த்­தி­செய்­யும் அதே வேளையில் ஒட்­டு­மொத்த சமூ­க­மாக அனை­வரை­யும் ஒன்­றிணைப்­பது வழி­பாட்­டுத் தலங்களுக்கு உள்ள முக்­கி­யப் பொறுப்பு என்று தொடர்பு, தகவல் அமைச்­சர் டாக்டர் யாக்கூப் இப்­ரா­ஹிம் தெரி­வித்­துள்­ளார். பொங்கோல் வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள அல்=இஸ்லாஹ் பள்­ளி­வா­ச­லில் நேற்று பிர­த­மர் லீ சியன் லூங்­கு­டன் இஃப்­தார் எனும் நோன்புத் திறப்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட பிறகு அமைச்­சர் யாக்கூப் செய்­தி­யா­ளர்­களி­டம் இவ்வாறு தெரி­வித்­தார். "புனித ரமலான் மாதத்­தில் பள்­ளி­வா­சல்­களில் நடை­பெ­றும் சிறப்பு நிகழ்ச்­சி­களைப் பிர­த­மர் பாராட்­டினார்.

சிங்கப்­பூ­ரின் ஆகப் புதிய பள்­ளி­வா­ச­லான அல்=இஸ்லாஹ் பள்­ளி­வா­சல் பொங்கோல் வட்­டா­ரத்­து­டன் முழுமை­யாக ஒருங்­கிணைந்­தி­ருப்­பதை அவர் வர­வேற்­றார்," என்றார் முஸ்லிம் விவ­கா­ரங்களுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சருமான டாக்டர் யாக்கூப். இஸ்­லா­மிய சமயம் அனை­வரை­யும் உள்­ள­டக்­கும் ஒரு சம­ய­மாகத் திகழ்­வதை மெய்ப்­பிக்­கும் வகையில் பள்­ளி­வா­சல் எல்­லாரை­யும் திறந்த கரங்களு­டன் வர­வேற்­ப­தா­க­வும் அவர் கூறினார். "நோன்புத் திறப்பு நிகழ்ச்­சிக்கு வரு­ப­வர்­களில் கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள். நோன்புக் கஞ்சி விநி­யோ­கிக்­கும்­போது முஸ்லிம் அல்­லா­த­வர்­களுக்­கும் கஞ்சி கொடுக்­கி­றோம். இஸ்­லா­மிய சமயம் எல்­லாரை­யும் அனு­ச­ரிக்­கும் சமயம் என்­பதைக் காட்ட விரும்­பு­கி­றோம்," என்றார் டாக்டர் யாக்கூப். நேற்றைய நோன்புத் திறப்பு நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் லீ அல்=இஸ்லாஹ் பள்­ளி­வா­ச­லின் நவீன வச­தி­களைப் பார்வை­யிட்­டார். அவ­ரு­டன் சமயத் தலை­வர்­களும் அடித்­த­ளத் தலை­வர்­களும் கலந்­து­கொண்ட­னர்.

பொங்கோல் வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள ஓராண்டு பூர்த்தியான அல்-இஸ்லாஹ் பள்­ளி­வா­ச­லில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங், தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் ஆகியோர் நோன்புக் கஞ்சியை கிண்ணங்களில் ஊற்றுகின்றனர். படம்: பெரித்தா ஹரியான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!