நாட்டு தற்காப்புக்கு மறுஉறுதி

சிங்கப்பூர் ஆயுதப்படை நாளைக் குறிக்கும் வகையில் நேற்று தீவு முழுவதும் நான்கு இடங்களில் சிங்கப்பூர் ஆயுதப்படை நாள் அர்ப் பணிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. மொத்தம் 303 நிறுவனங்களைச் சேர்ந்த 660க்கும் அதிக மான தேசிய சேவையாளர்களும் முதலாளிகளும் அந்த நிகழ்ச்சி களில் கலந்துகொண்டு சிங்கப் பூரின் தற்காப்புக்குத் தங்களுடைய கடப்பாட்டை மறுஉறுதிப்படுத் தினர். சிங்கப்பூர் சீன வர்த்தக தொழில் சபை, சாஃப்ரா பொங் கோல், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகம், பயோபொலிஸ் ஆகிய இடங்களில் அந்த நிகழ்ச் சிகள் நடந்தன.

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் சீன வர்த்தக, தொழில் சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சிங்கப்பூர் ஆயுதப்படை நாள் செய்தியை விடுத்தார். "சிங்கப்பூரின் சுயாதிபத்திய உரிமையையும் நம் வாழ்க்கை வழியையும் பாதுகாக்க வலுவான, ஆற்றல்மிக்க சிங்கப்பூர் ஆயுதப் படை அவசியம்," என்று அமைச்சர் தெரிவித்தார். தேசிய சேவைக்கு ஆதரவு அளிக்கும்படி சிங்கப்பூரர்களை அமைச்சர் வலியுறுத்தினார். "சிங்கப்பூர் ஆயுதப்படை நாளில் ஆயுதப்படையைச் சேர்ந்த ஆடவர்களும் பெண்களும் சிங்கப் பூரை பாதுகாப்பதில் தங்களுக்கு உள்ள கடமையைத் தங்களால் முடிந்த வரையில் தலைசிறந்த முறையிலும் நம்பிக்கைக்குப் பாத் திரமான முறையிலும் நிறைவேற்றப் போவதாக மறுஉறுதி தெரிவிக் கிறார்கள். இதற்குக் கைமாறாக சிங்கப்பூரர்கள் அனைவரும் சிங் கப்பூர் ஆயுதப்படைக்கு முழு மன துடன், ஊக்கத்துடன், ஒற்றுமையு டன் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

"சிங்கப்பூரை நிறுவிய நமது தலைமுறையினர் நமக்கு ஏற்படுத் தித் தந்துள்ள 'நமது தாயகம், நமது சிங்கப்பூர்' விலைமதிப் பில்லாத ஒன்று. நம்முடைய வாழ்க்கை முறை நாம் ஒன்றாகச் சேர்ந்து பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று," என்று அமைச்சர் தெரி வித்தார். கடந்த 2012ல் நடந்த தெமாசெக் சங்கத்தின் 30வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் முன் னாள் பிரதமர் திரு லீ குவான் இயூ குறிப்பிட்டதை அமைச்சர் செய்தியில் சுட்டிக்காட்டினார்.

சீன வர்த்தக, தொழில் சபையில் சிங்கப்பூர் ஆயுதப்படை நாள் நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (இடமிருந்து நான்காவது) தேசிய சேவையாளர்கள், முதலாளிகள், சிங்கப்பூர் ஆயுதப்படையின் மூத்த தளபதிகள் ஆகியோர் ஆயுதப்படை உறுதிமொழியை வாசித்து சிங்கப்பூரின் தற்காப்புக்குத் தங்களுடைய கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினர். படம்: தற்காப்பு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!