சமூக நிலையங்களில் கைத்தொழில்கள்

மக்கள் கழகத்தின் 'கைத்தொழில் கற்றுக்கொள்' திட்டம் நேற்று ஜூரோங்கில் மக்கள் கழக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மார்க்கெட் பிளேசில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. துணைப் பிரதமர் தர்மன் சண் முகரத்னம் அத்திட்டத்தொடரை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். மக்கள் கழகம் வழங் கும் பயிற்சிப் படிப்புகளை அங்கு பலரும் பரிசோதித்துப் பார்த்தனர். மக்கள் கழக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சிப் படிப்புகளில் சேர பலரும் கையெழுத்திட்டனர்.

சிங்கப்பூரர்கள் தங்கள் தேர்ச்சி களை மேம்படுத்திக்கொள்ள உதவ அரசாங்கம் அமலாக்கும் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் திட்டத்திற்கு மிகவும் ஆக்ககரமான ஆதரவு கிடைத் திருப்பதாகவும் அந்த ஊக்கத்தை தொடர்ந்து மேம்படுத்த விரும்புவ தாகவும் திரு தர்மன் குறிப்பிட்டார். மக்கள் கழக ஸ்கில்ஸ்ஃபியூச் சர் பயிற்சிப் படிப்புகள் நாடு முழு வதும் 50 சமூக மன்றங்களில் அமல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்த திரு தர்மன், எல்லா வயதினரும் தங்கள் நாட்டத்திற்கு ஏற்ற பயிற்சிப் படிப்புகளைத் தேர்ந் தெடுத்துக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இது ஆயுள் முழுவதும் கற்கும் கலாசாரத்தை ஏற்படுத்த உதவுவ தாகவும் அவர் தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு முன் இந்தப் பயிற்சிப் படிப்புகளில் 11,000 பேர் பதிந்துகொண்டு இருந்தனர். சமூக நிலையங்களில் பயிற்சிப் படிப்புகள் அமலாவதால் குடியிருப் பாளர்கள் வசதியாக தேர்ச்சி களைக் கற்கலாம் என்றும் புதிய தேர்ச்சிகளைக் கற்பதால் கற்பவ ருக்கு மட்டுமன்றி சமூகத்துக்கும் நன்மை ஏற்படும் என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் பயிற்சிப் படிப்புத் தேர்ச்சியைச் சோதித்துப் பார்க்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!