இருவருக்குக் காசநோய்

அங் மோ கியோ அவென்யூ 3, புளோக் 203ல் வசித்து வரும் குடியிருப்பாளர்களில் இருவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருக் கலாம் என்று அவர்களது மார்பக ஊடுகதிர்ப் பரிசோதனை காட்டு வதாக சுகாதார அமைச்சு தெரி வித்துள்ளது. அந்த இருவரும் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் அவர்களின் உடல்நிலை கண் காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது. அந்த புளோக்கைச் சேர்ந்த இந்நாள், முன்னாள் குடியிருப்பா ளர்களில் இலவச மருத்துவப் பரி சோதனை செய்துகொண்ட 233 பேரில் 164 பேருக்குக் காசநோய் பாதிப்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

மூன்று குடியிருப்பாளர்கள் முன்னர் காசநோயால் பாதிக்கப் பட்டு, பிறகு அதற்கு முழுமையான சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இன்னும் ஒன்பது பேர் காச நோய்ப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அங்குள்ள 45 குடியிருப்பாளர் களுக்கு மறைமுக காசநோய் இருப்பதாகவும் அமைச்சு குறிப் பிட்டது. மறைமுக காசநோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு எந்த அறிகுறி யும் இருக்காது என்றும் அவர்கள் உடல்நலம் குன்றியது போல் உணரமாட்டார்கள் என்றும் அவர் களால் நோய்த்தொற்று பரவாது என்றும் அமைச்சு தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!