‘சமூகங்களை இணைக்க தொண்டூழியர்கள் அவசியம்’

வீ. பழனிச்சாமி

மக்களையும் சமூகங்களையும் இணைக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் அந்தத் திட் டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள், அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது போன்ற பலவிதமான செயல்பாடுகளை நடைமுறைப் படுத்த தொண்டூழியர்கள் ஆற்றும் பங்கு இன்றியமையாதது என்பதை துணைப் பிரதமர் தர்மன் சண்முக ரத்னம் வலுயுறுத்தியுள்ளார்.

இந்திய சமூகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தங்கள் நேரத் தையும் உழைப்பையும் அர்ப்பணிக்கும் தொண்டூழியர்களுக்கு நன்றி கூறும் வகையில் சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் நேற்று ராயல் பாம் ஹோட் டலில் அவர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது. அதில் முக்கிய உரையாற்றிய சிண்டா அறங்காவலர் குழுவின் தலைவருமான திரு தர்மன், "மக்களுக்காக பல புதிய திட்டங் கள் நடப்பிலுள்ளன. ஆனால், அத்திட்டங்களின் அம்சங்களை முன்னுதாரண மனிதர்களாக விளங்கும் தொண்டூழியர்களைக் கொண்டு மக்களை நேருக்கு நேர் சந்தித்து தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அவை மக்க ளிடம் எளிதில் சென்று சேரும். தொண்டூழியர்கள் மக்களுடன் இதயபூர்வமான உறவை ஏற்படுத் திக்கொள்வதால் சமூகங்கள் ஒன் றிணைக்கப்படுகின்றன," என்றார்.

விருது வென்ற தொண்டூழியர்கள் புடைசூழ 'வீஃபி' எடுத்துக்கொள்ளும் துணைப் பிரதமரும் சிண்டா அறங்காவலர் குழுத் தலைவருமான திரு தர்மன் சண்முகரத்னம். உடன் சட்ட, நிதி மூத்த துணை அமைச்சரும் சிண்டா நிர்வாகக் குழுத் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா (கீழ்வரிசையில் நடுவில்), சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே.பரதன் (இடது ஓரம்). படம்: சிண்டா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!