அமர்நாத் புனிதப் பயணம்: 15,000 பக்தர்கள் தவிப்பு

காஷ்­மீ­ரில் நடை­பெற்று வரும் கல­வ­ரத்தை முன்­னிட்டு அமர்­நாத் புனிதப் பய­ணம் சென்ற பக்­தர்­கள் சுமார் 15,000 பேர் காஷ்­மீரை நோக்­கிச் செல்ல முடி­யா­மல் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்கள் அனை வரும் ராணுவ முகாம், கோயில், பள்ளி என பல இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ­­­சு­மார் 5,000 தமி­ழக பக்­தர்­கள் உணவு, தண்­ணீர் இல்­லா­மல் தவித்து வரு­வதாகவும் அவர்­களை மீட்க வேண்­டும் என்றும் தமி­ழக அர­சுக்கு உற­வி­னர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். அங்கு போதிய உணவு, தண்­ணீர், கழிப்­பிட வச­தி­கள் கிடைக்காமல் அவர்­கள் பெரும் அவ­திக்கு ஆளா­கி­யுள்­ள­னர். அதி­லும் குறிப்­பாக தமி­ழக பக்­தர்­களில் பெரும்பா­லான முதி­யோர்­கள் உள்­ள­தால், அவர்­கள் பெரும் சிர­மத்திற்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

இவர்­க­ள் புனி­தப் பய­ணத்தைத் தொட­ர­வும் முடி­யா­மல் தமி­ழ­கம் திரும்பி வர­வும் முடி­யா­மல் தவித்து வரு­கின்ற­னர். மேலும், அங்கு கைத்­தொலை­பேசி, இணையச் சேவைகள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தால் தங்க­ளது உற­வி­னர்­களைத் தொடர்பு கொள்ள முடி­யா­ம­லும் அவர்­கள் சிர­மத்­திற்கு ஆளா­கி­யுள்­ள­னர். இது தொடர்­பாக தமி­ழக அரசு விரைந்து செயல்­பட்டு ராணுவ முகா­மில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள தமி­ழக பக்­தர்­களை மீட்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என உற­வி­னர்­கள் தமி­ழக அர­சுக்­குக் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். கடந்த 2ஆம் தேதி பலத்த பாது­காப்­பு­டன் அமர்­நாத் புனித நடைப் பய­ணம் தொடங்­கி­யது. அடுத்­த­ மா­தம் 18 ஆம் தேதி வரை இந்த புனித நடைப் ­ப­ய­ணம் நடை­பெற உள்­ளது.

இதில் பங்­கேற்­ப­தற்­காக உள்­நாட்­டில் இருந்து மட்­டு­மின்றி வெளி­நாட்­டில் இருந்­தும் பக்­தர்­கள் காஷ்­மீ­ரில் குவிந்­துள்­ள­னர். ­­­இந்­நிலை­யில் கடந்த சில நாட்­களுக்கு முன்னர் அங்கு 22 வயது பயங்க­ர­வாதி பர்ஹன் முஸாஃபர் வானி சுட்­டுக் கொல்­லப்­பட்­டான். அதற்குக் கண்ட­னம் தெரி­வித்­து பயங்க­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் 15 பேர் உயி­ரி­ழந்த­னர்.

இதனால் தற்­கா­லி­க­மாக அமர்­நாத் புனித நடைப் பய­ணம் நிறுத்தி வைக்­கப்­பட்­டது. மாநி­லத்­தின் சில இடங்களில் 144 ஊரடங்கு உத்­த­ர­வும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அமர்­நாத் புனிதப் பயணம் சென்­றுள்ள பக்­தர்­கள் பெரும் நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்­ ள­னர். இதற்கிடையே காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரி வித்துள்ள அம்மாநில முதல்வர் மெகபூபா, விரைவில் அங்கு அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு = காஷ்மீரில் பாதுகாப்புப் படை யினரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு பதற்றம் நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மேலும் பல இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுற்றுலா சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமைதி திரும்பி யுள்ளதாகவும் பக்தர்கள் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுவதாகவும் காஷ்மீர் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று 25,000 பக்தர்கள் பால்டல், பகல்கம் ஆகிய இடங்களிலிருந்து 1,741 வாகனங்களில் ஜவகர் சுரங்கத்தைக் கடந்ததாக காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார். ஜூலை 2ஆம் தேதி முதல் 1,28,946 பக்தர்கள் அமர்நாத் புனிதக் குகையை அடைந்து வழிபாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ராணுவ முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்கள். காஷ்மீரின் வடக்கு தெற்குப் பகுதிகளில் உள்ள பகல்கம், பால்டல் போன்ற இடங்களில் உள்ள ராணுவ முகாம்களில் பெரும்பாலான பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!