பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறையில் மாற்றம்

'பிஎஸ்எல்இ' எனும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு மதிப்பீட்டு முறையில் இப்போதைய 'டி-=ஸ்கோர்' முறைக்குப் பதிலாக 'அடைவுநிலை' எனப்படும் எட்டுத் தரநிலைகள் கொண்ட மதிப் பெண் தர அளவைமுறை அறிமுகப் படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாண்டு தொடக்கநிலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் இந்தப் புதிய முறைக்கு மாறும் வகையில் 2021ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றங்கள் நடப் பிற்கு வரும். புதிய மதிப்பெண் தர அளவைமுறையின்படி, ஒவ்வொரு பாடத் திற்கும் எட்டுத் தரநிலைகள் இருக்கும்.

ஒரு பாடத்தில் 90 மற்றும் அதற்குமேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் AL1 என்ற அடைவுநிலையைப் பெறுவர். 85 முதல் 89 மதிப்பெண்கள் வரை பெறு வோர் AL2, 80 முதல் 84 மதிப்பெண்கள் வரை பெறுவோர் AL3 என்ற வகையில் அடைவுநிலைகள் வகுக்கப்பட்டுள்ளன. 20 மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெறுவோர் AL8 என்ற கடைசி அடைவு நிலையைப் பெறுவர். மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற அடைவுநிலைகளின் கூட்டுத் தொகை, உயர்நிலை 1 சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் ஆகிய நான்கு பாடங்களிலும் AL1 என்ற அடைவுநிலையை ஒரு மாணவர் பெற்றார் எனில் அவரது மொத்த புள்ளிகள் 4. ஒரு மாணவர் பெறும் ஆகக் குறைந்தபட்ச புள்ளிகள் 32ஆக இருக்கும்.

இந்தப் புதிய மாற்றங்களால் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் போக்கு மாறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. அத்துடன், இப்போதைய பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் முறையில் இருப்பதைப் போல மாணவர்களை நுணுக்கமாக வகைப்படுத்துவதும் குறையும். சக மாணவர்கள் எப்படிச் செய்துள்ளார்கள் என்பதைப் பொறுத்து அல்லாமல் ஒரு மாணவரின் தனித்த அடைவுநிலையை புதிய முறை வெளிப்படுத்தும். மேலும், தங்கள் பிள்ளைகளின் கற்றல் தேவை கள், திறன்கள், ஆர்வங்கள் ஆகியவற் றுக்கு ஏற்ற தகுதியான பள்ளிகளைத் தேர்வு செய்யவும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும்.

தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!