சிங்கப்பூரர்கள் விசா இன்றி 30 நாட்கள் மங்கோலியா சென்று வருவது பற்றி பேச்சு

மங்கோலியா செல்லும் சிங்கப்பூரர் கள் அங்கு விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தங்கியிருக்க அனு மதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது, அவர்களால் விசா இன்றி 14 நாட்கள் வரைதான் தங்க முடியும். மங்கோலியத் தலைநகர் ஊலான் பாத்தோரில் உள்ள அர சாங்க மாளிகையில் அந்நாட்டுப் பிரதமர் ஜர்கல்துல்கா எர்டென்பத்= சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இடையே நடந்த இருதரப்பு ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையின் போது இந்த விசா இல்லா கால நீட்டிப்பு அம்சம் குறித்து விவா திக்கப்பட்டது. அப்படி விசா இல்லாமல் அதிக காலம் தங்கியிருக்க அனுமதிப்ப தன்மூலம் சிங்கப்பூர்=மங்கோலியா இடையிலான உல்லாச, வர்த்தகப் பயணங்கள் எளிதாகும் என்று திரு லீ சொன்னார்.

சிங்கப்பூருக்கும் மங்கோலியா விற்கும் இடையே 45 ஆண்டு கால அரசதந்திர உறவு இருந்து வரும் நிலையில் சிங்கப்பூர் பிர தமர் ஒருவர் மங்கோலியா சென்றி ருப்பது இதுவே முதல் முறை. ஆசியா=ஐரோப்பா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மங்கோ லியா சென்றுள்ள பிரதமர் லீக்கு நேற்று மதிய விருந்து அளித்துச் சிறப்பித்தார் திரு ஜர்கல்துல்கா. இருதரப்பு உறவுகளை வலுப் படுத்த இன்னும் என்ன செய்யலாம் என்பதை ஆராய்வதும் தமது இந்தப் பயணத்தின் நோக்கங்களில் ஒன்று என திரு லீ தெரிவித்தார். கடந்த ஆண்டு இரு நாடுகளுக் கிடையிலான வர்த்தக உறவு $64 மில்லியனாக இருந்தது. இருப் பினும், மங்கோலியாவில் வர்த்தகம் புரிய சிங்கப்பூர் நிறுவனங்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, அனைத்து சேவைகளுக்குமான அரசாங்க மையம் அமைந்துள்ள மி‌ஷீல் மெகா கடைத்தொகுதியானது இரு நாட்டுத் தொழிலதிபர்களின் கூட்டு முயற்சி. இத்தகைய கூட்டு முயற்சிகள் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என்றார் திரு லீ.

ஆசியா-ஐரோப்பா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மங்கோலியா சென்றுள்ள பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) அந்நாட்டுத் தலைநகர் ஊலான் பாத்தோரில் இருக்கும் மி‌ஷீல் மெகா கடைத்தொகுதியில் அமைந்துள்ள அனைத்து சேவைகளுக்குமான ஒரே அரசாங்க மையத்தைப் பார்வையிட்டார். உடன் அவரது துணைவியார் ஹோ சிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!