எஸ்­எம்­ஆர்­டியை வாங்க முனையும் ­­­தெமாசெக்

சிங்கப்­பூர் முத­லீட்டு நிறு­வ­ன­மான தெமாசெக் ஹோல்­டிங்ஸ், ஒரு பங்கின் விலை $1.68 என்ற கணக்­கில் மொத்தம் $1.18 பில்­லி­ய­னுக்கு எஸ்எம்ஆர்டி நிறு­வ­னத்தை வாங்கிக்கொள்ள முன் ­வந்­துள்­ளது. இதனை­ய­டுத்து எஸ்­எம்­ஆர்டி தனி­யார்­ம­ய­மாக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்தக் கொள்­மு­தல் வெற்­றி க­ர­மாக இடம்­பெ­றும் பட்­சத்­தில் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்­தின் உரிமை­யா­வ­து­டன் சிங்கப்­பூர் பங்­கு­சந்தைப் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­பட்­டு­வி­டும்.

தெமாசெக் நிறு­வ­னத்­தின் இந்தத் திட்டம் இதர பங்­கு­தா­ரர்­களின் அனு­ம­தியை எதிர்­நோக்­கி ­யுள்­ளது. நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கும் இந்தப் பங்கு விலை இந்­நி­று­வ­னத்­தின் கடைசி $1.545 பங்கு விலையை­விட அதி­க­மா­ன­தா­கும். எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தில் 54% தெமாசெக் நிறு­வ­னத்­துக்­குச் சொந்த­மா­னது. எஸ்­எம்­ஆர்­டி­யின் மதிப்­பு கிட்­ட­தட்ட $2.4 பில்­லி­யன். எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­ தி­டமி­ருந்து வடக்கு=தெற்கு, வடக்கு=மேற்கு ரயில் தடங்கள், வட்­டப்­பாதை ரயில் தடம், புக்கிட் பாஞ்சாங் இல­கு­ரக வழித்­த­டம் ஆகி­ய­வற்றை $1.06 பில்­லி­யன் தொகைக்கு வாங்­கிக்­கொள்­ளப்­போ­வ­தாக அரசாங்கம் சென்ற வெள்­ளிக்­கிழமை அறி­விப்­பு­ வி­டுத்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!