சென்னையிலிருந்து 29 பேருடன் புறப்பட்ட விமானம் மாயம்

இந்திய ஆகாயப் படைக்குச் சொந்தமான AN-32 விமானம் நேற்றுக் காலை வான்வெளியில் காணாமற்போனது. காலை 8.30 மணிக்கு சென்னை அருகே தாம் பரம் விமானப் படைத்தளத்திலி ருந்து அந்தமான்=நிக்கோபார் தலை நகர் போர்ட் பிளேர் நோக்கிக் கிளம்பிச் சென்றது அவ்விமானம். முற்பகல் 11.20 மணிக்கு போர்ட் பிளேரில் தரை இறங்க வேண்டிய விமானம் காலை 9.12 மணிக்குப் பின்னர் விமானக் கட்டுப்பாட்டு அறையின் தொடர் பிலிருந்து விடுபட்டது. அப்போது சென்னையிலிருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலை வில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அது என்ன ஆனது என்று தெரி யாததால் பதறிப்போன அதிகாரி கள் உடனடியாக தேடுதல் வேட்டைக்குப் பரிந்துரைத்தனர்.

தரையிலிருந்து புறப்பட்ட 16ஆவது நிமிடத்தில் கட்டுப் பாட்டு அறை அதிகாரிகளுடன் பேசிய அந்த விமானத்தின் விமானி, "எல்லாம் வழக்கநிலை யில் உள்ளது," என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அவ ரிடமிருந்து எவ்விதத் தகவலும் வரவில்லை என்று அதிகாரிகள் கூறினர். மலாக்கா நீரிணைக்கு அருகே உள்ள இந்திய ராணுவத் தளத் திற்கு ஆட்களைக் கொண்டு சேர்ப்பது அந்த விமானத்தின் சேவையாக இருந்துள்ளது. அதே போல நேற்று 29 பணியாளர்களை அவ்விமானம் சுமந்து சென்றது. அவர்களில் பலரும் ஆகாயப்படை, கப்பற்படை, கடலோரக் காவல் படை பணியாளர்கள். குடும்ப உறுப்பினர்கள் எண்மரும் விமான ஊழியர்கள் அறுவரும் அந்த 29 பேரில் அடங்குவர். AN=32 விமானத்தில் நான்கு மணி நேரம் பறப்பதற்குத் தேவை யான எரிபொருள் மட்டுமே இருக்கும்.

விமானம் மாயமாகி நான்கு மணி நேரத்தைக் கடந்துவிட்ட பிறகு அது விபத்தில் சிக்கி விழுந்திருக்கும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. விமானத்தைத் தேடும் பணியில் ஐந்து விமா னங்களும் 13 கப்பல்களும் தீவிர மாக ஈடுபட்டுள்ளன. மிகவும் உறுதியான AN=32 விமானம் மலைத்தொடர்களிலும் பாலைவனங்களிலும் எல்லாவித வானிலையிலும் பறக்கும் திறன் கொண்டது என்று ஓய்வுபெற்ற ஆகாயப்படை அதிகாரி பிரஃபுல் பக்‌ஷி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!