பேங்காக் எரவான் கோவில் விபத்து; சிங்கப்பூரர்கள் காயம்

தாய்லாந்து தலைநகர் பேங்காக் கில் இருக்கும் பிரபலமான வழி பாட்டு இடம் எரவான் கோவில். அந்தக் கோவிலுக்குள் வெள்ளிக் கிழமை ஒரு கார் புகுந்ததால் நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர். திருவாட்டி ஓங் சை தோ, 70, என்ற மாதும் குமாரி இங் இகோன் லெங், 35, என்பவரும் அந்தக் கோவிலில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தபோது அந்த விபத்து நிகழ்ந்ததாக தாய்லாந்தின் 'பேங்காக் போஸ்ட்' செய்தித்தாள் தெரிவித்தது. இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காரை ஓட்டிச்சென்ற மாதுக்கு அந்தக் கோவில் இருந்த இடத் திற்கு வந்தபோது திடீரென்று வலிப்பு வந்துவிட்டது. அவரால் தனது காரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பேங்காக் போலிஸ் அதிகாரியான போர்ன் சாய் என்பவர் தெரிவித்தார்.

அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அந்தக் கோவிலுக்குள் நுழைந்து அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோதி யது என்று போலிஸ் தெரிவித்ததாக ஏஎப்ஃபி செய்தி நிறுவனம் குறிப் பிட்டது. இந்த விபத்து பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. விபத்து நிகழ்ந்ததும் போலிஸ் சம் பவ இடத்துக்கு விரைந்தது. "நாங்கள் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தோம். திடீரென்று பெரும் சத்தம் கேட்டது. கார் ஒன்று கோவிலுக்குள் நுழைந்தது. அங்கும் இங்கும் அலறியபடி ஓடினோம். "ஏதோ குண்டு வெடித்து விட்டது என்று நினைத்தோம். இருந்தாலும் எல்லாருமே அமைதி யாக இருந்தோம்," என்று சம்பவம் நிகழ்ந்தபோது எரவான் கோவி லில் வழிபாடு நடத்திகொண்டு இருந்த வியட்னாமைச் சேர்ந்த சுற்றுப்பயணியான 21 வயது கிறிஸ்டி சொன்னதாக ஏஎப்ஃபி செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்தக் காரை ஓட்டிச் சென்ற மாதுக்கு வயது சுமார் 40 இருக் கும் என்று தெரிந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!