ஜோகூர் கடலில் படகு விபத்து: 7 பேர் மரணம்

ஜோகூர் பாரு: இந்தோனீசியர்கள் 62 பேரை ஏற்றிச்சென்ற ஒரு படகு ஜோகூர் கடல் பகுதியில் மூழ்கிய தில் 7 பேர் மரணம் அடைந்த தாகவும் இன்னும் 21 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். கோத்தா திங்கி அருகே நேற்றுக்காலை கரை ஒதுங்கிய மூன்று சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த மூவரையும் சேர்த்து விபத்தில் 7 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக அந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் கடல் நீரில் மூழ்கி இறந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகா தெரிவித்தது. அப்படகு சனிக்கிழமை இரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடைப் பட்ட நேரத்தில் கடலில் மூழ்கிய தாகவும் விபத்தைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் எட்டுப் பெண்கள் உள்பட 34 பேரை காப்பாற்றிக் கரை சேர்த்ததாகவும் ஜோகூர் குடிநுழைவுத் துறை இலாகா இயக்குநர் ரோஹைய்சி இப்ராகிம் கூறினார்.

அப்படகில் சென்ற இந்தோனீசி யர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கத்துடன் அப்பயணத்தை மேற்கொ-ண்டதாக ஆரம்பகட்ட புலன் விசாரணைத் தகவல்கள் கூறுகின்றன. சனிக்கிழமை இரவு அவர்கள் படகில் ஏறியதாகவும் அவர்களின் படகு ஜோகூருக்கு அருகே கொந்தளிப்பு மிக்க கடல் அலையில் சிக்கி விபத்துக்கு உள்ளானதாகவும் திரு இப்ராகிம் கூறினார். விபத்தில் உயிர் தப்பிய 25 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்ட 34 பேர் ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அந்த 34 பேரில் மூவரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருந்ததாகவும் மற்ற வர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்றும் இப்ராகிம் கூறினார். காணாமல் போனவர் களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அப்பணியில் 29 ராணுவ அதிகாரிகள், 12 போலிஸ் அதிகாரிகள், மலேசிய கடல்துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் ஈடு பட்டுள்ளதாகவும் மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!