காற்றாய் பரவும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த போராடும் பல ஆயிரம் தீயணைப்பாளர்கள்

­­­­­­­அ­மெ­ரிக்­கா­வின் லாஸ் ஏஞ்சலி­சில் கட்­டற்­று பரவும் காட்டுத் தீயை அணைக்க 1,600க்கும் மேற்­பட்ட தீயணைப்­பா­ளர்­கள் 41 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் அதி­க­மான வெப்­ப­நிலை­யில் போராடி வரு­கின்ற­னர். லாஸ் ஏஞ்சலி­சுக்கு வடக்­கே பல ஆயிரம் ஏக்கர் நிலங் களை விழுங்­கி­விட்ட தீயில் நேற்று மாலைக்­குள் 18 வீடுகள் அழிந்துள்­ளன. ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ளார். நூற்­றுக்­க­ணக்­ கா­ன­வர்­கள் வீடுகளை விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர். நெடும் சாலைகள் மூடப்­பட்­டுள்­ளன. நேற்று அதி­காலைக்­குள் 13,300 ஹெக்­ட­ருக்கு தீ பர­வி­யி­ருந்தது. பல ஆண்­டு­க­ளா­கத் தொடர்ந்த வறட்­சி­யினால் காய்ந்து போயுள்ள நிலப்­ப­ரப்­பில் காற்றும் வேகமாக வீசு­வ ­தால் தீ கிடு­கி­டு­வென பர­வு­கிறது.

"ஐந்தா­வது ஆண்டாக வறட்சி நில­வு­கிறது. அதனால் நெருப்­பின் அதி­தீ­விர­மான போக்கை நாங்கள் அனு­ப­விக்­கி­றோம்," என்று கூறினார் தீயணைப்­புப் பிரிவின் தலைவர் திரு டார்ல் ஒஸ்பி. சாண்டா கிளா­ரிசா­வி­லி­ருந்து 480 கிலோ மீட்டர் வட­மேற்­கி­லுள்ள மொண்­டெ­ரி­யின் கரை­யோ­ரப் பகு­தி­யில் 10,262 ஹெக்­ட­ருக்கு தீ பற்­றி­யி­ருக்­கிறது. அங்­கி­ருந்து பலர் வெளி­யேற்­றப்­பட்­ட­தாக தீயணைப்­பா­ளர்­கள் கூறினர். சாண்டா கிளாரிசா அருகே வெள்­ளிக்­கிழமை பகலில் தீ ஏற்­பட்­டது. அதைத்­தொ­டர்ந்து அப்­ப­கு­தி­யில் வசிக்­கும் 1,500 பேர் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். குறைந்தது 18 வீடுகள் தீயில் கருகி விட்டன என்று லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்­புப் பிரிவு கூறியது. தீயின் பாதை­யி­லுள்ள கிட்­டத்­தட்ட 100 வர்த்­த­கக் கட்­ட­டங்கள் காலி செய்­யு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளன.

தீயைத் தொடர்ந்து 14 நெடுஞ்சாலை­கள் போக்­கு­ வ­ரத்­துக்கு மூடப்­பட்­டுள்­ளன என்று கலிஃபோர்னியா நெடுஞ் சாலை சுற்றுக்காவல் படை தெரிவித்தது. கடுமை­யான வெப்பம், வேகமான காற்று, வறண்ட நிலப்­ப­ரப்பு எல்லாமே தீயணைப்­பா­ளர்­களுக்­குப் பெரும் சவாலாக உள்ளது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். எனினும், அவர்­கள் தொடர்ந்து போராடி வரு­கின்ற­னர். நேற்றுக் காலை வரையில் 10 விழுக்­காடு தீயையே கட்டுப் ­படுத்­தப்­படுத்த முடிந்துள்ள தாக அவர்­கள் கூறி­னர். படத்­தில் வேகமாகப் பரவும் தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்கள். படம்: ஏஎ­ஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!