களை கட்டிய கம்பன் விழா சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்

கழகம் கடந்த சனிக்கிழமை கம்பன் விழாவை நடத்தியது. விழாவுக்குச் சிறப்பு விருந் தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் இந்து அறக் கட்டளை வாரியத்தின் துணைத் தலைவருமான திரு ரா. தினகரன் சமய, இன நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு கம்ப ராமாயணம் என்று தமது உரையில் கூறினார். தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான திரு தா.கு. சுப்பிரமணியன் ‚'வஞ்ச மகள்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ராவண வதமே ராமாவதார நோக்கம் என்றும் அதற்கு வழிவகுத்தவர்கள் கூனி எனும் மந்தரை, கைகேயி, சூர்ப்பனகை ஆகிய மூன்று பெண்கள் என்றாலும் அவர்களில் முதன்மை யானவள் சூர்ப்பனகைதான் என்று அவர் குறிப்பிட்டார். அவள்தான் சீதை மீது ராவணன் மோகம் கொள்ளும்படி செய்து அதன் மூலம் அவனுக்கு அழிவை ஏற்படுத்தினாள் என்று திரு சுப்பிரமணியன் கூறினார். இதற்குக் காரணம் முன்பு சூர்ப்பனகையின் கணவனை ராவணன் கொன்றதால் அதற்குப் பழி தீர்த்துக் கொண்டதாக வீடணன் மூலம் கூற வைக்கிறார் கம்பர் என்று திரு சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் அவர் சுவைபட உரையாற்றி னார். எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்றதன் வழி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டிலும் பரவுவதற்கு வகை செய்யப் பட்டதாகக் குறிப்பிட்டார். நூல்கள் எதிர்பார்த்த 50,000 ரூபாயைத் தாண்டி 80,000 ரூபாய்க்கு மேல் விற்றுள்ளதாகத் தெரிவித்தார். வரும் செப்டம்பர் 17, 18, 24, 25 ஆகிய நான்கு நாட்கள் எழுத்தாளர் கழகத்தின் 40ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற் பாடு செய்து வருவதாகவும் அதற்கு அனைவரும் ஆதர வளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உயர்நிலை 3 பிரிவுக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் மிக்கில் ஆனந்த் சிறப்பு விருந்தினர் திரு தினகரனிடமிருந்து பரிசு பெறுகிறார். அருகில் திரு தா.கு. சுப்பிரமணியன் (இடது), திரு நா. ஆண்டியப்பன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!