மியன்மார் பணிப்பெண்ணைக் கொலை செய்ததாக தாய், மகள் மீது குற்றச்சாட்டு

மியன்­மாரைச் சேர்ந்த பணிப்­பெண்ணைக் கொலை செய்­த­தாக பீஷானில் வசிக்­கும் தாய், மகள் மீது நேற்று நீதி­மன்றத்­தில் குற்றம் சாட்­டப்­பட்­டது. இல்­லத்­த­ர­சி­க­ளான காயத்­திரி முருகை­யன், 36, பிரேமா எஸ் நாரா­ய­ண­சாமி, 58, ஆகி­யோ­ரி­டம் குற்ற மறுப்போ, குற்ற ஒப்­பு­தலோ நேற்று பெறப்­ப­ட­வில்லை. இம்­மா­தம் 25, 26 தேதி­களுக்கு இடைப்­பட்ட சம­யத்­தில் புளோக் 145, பீஷான் ஸ்திரீட் 11ல் உள்ள அவர்­க­ளது வீட்டில் பணி­பு­ரிந்து வந்த பியாங் ங்கை டோன், 24, எனும் பணிப்­பெண்ணைக் கொலை செய்­த­தாக காயத்­திரி, பிரேமா மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது. இவ்­வி­ரு­வ­ரும் நேற்று முன் ­தி­னம் கைது செய்­யப்­பட்­ட­னர்.

விசா­ரணைக்­கா­கக் காவலில் எடுப்­ப­தற்­கான அனு­ம­தி­யு­டன் இவ்­வி­ரு­வரை­யும் மத்திய போலிஸ் பிரிவில் காவலில் வைக்க அரசுத் தரப்­பில் கோரப்­பட்­டது. குற்ற மறுப்போ, குற்ற ஒப்­பு­தலோ பெறப்­படு­வதற்­குத் தயார்­நிலை­யில் இவ்­வி­ரு­வ­ரும் இல்லை என அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர் முகமது ஃபைசால் கூறினார். இருவர் மீதான குற்­றச்­சாட்­டு ­கள் நீதிமன்றத்தில் தனித்­த­னியே தமிழில் வாசிக்­கப்­பட்­ட­போது இரு­வ­ரும் எந்த உணர்வை­யும் வெளிக்­காட்­டவில்லை. இரு­வ­ரும் எதிர்­வ­ரும் வியா­ழக்­கிழமை நீதி­மன்றத்­தில் முன்­ னிலைப்­படுத்­தப்­படு­வர்.