சமூகப் பணிகளில் இளையர்களின் பங்களிப்பு

இளையர்களின் பலதுறை திறமை களை அங்கீகரிக்கவும் அவர் களின் விருப்பங்களை மதித்துப் போற்றவும் சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் முதன்முதலாக சனிக் கிழமையன்று இளையர் கேளிக்கை விழா நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. பாய லேபார் கோவன் சமூக நிலையத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் வாழ்வின் பல பிரிவு களையும் சேர்ந்த 800க்கும் அதிக இளையர்கள் கலந்துகொண்டார் கள். நடனம், காற்பந்து போட்டிகள் போன்ற துறைகளில் இளையர் களின் ஆற்றல் அந்த கேளிக்கை விழாவில் வெளிப்பட்டது.

'இளையர்களைக் கொண்டாடு வோம்' என்ற கருப்பொருளுடன் நடந்த அந்த விழா, இளையர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒருவர் மற் றொருவரின் சாதனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப் பையும் வழங்கியது. சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டார். "நம் இளையர்களிடம் ஆற்ற லும் சக்தியும் இருக்கின்றன. தங்கள் சொந்த ஆற்றலை இளை யர்கள் மேலும் வளர்த்துகொள்ளத் தொடங்கும் ஒரு நிகழ்ச்சியாக இன்றைய நிகழ்ச்சி அமையும். "அதோடு, சமூகத்திற்குத் தாங்கள் எப்படி உதவ முடியும் என்பதைப் பற்றிய சிந்தனையையும் இந்த நிகழ்ச்சி இளையர்கள் மனதில் ஏற்படுத்தும்," என்று குமாரி இந்திராணி ராஜா குறிப் பிட்டார். கேளிக்கை நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக ஒரு குழு விவாத அங்கம் இடம்பெற்றது.

பிரபல இளைஞர்கள் கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை ஆகியவற்றில் தாங்கள் கடந்து வந்த சவால்களையும் தங்கள் விருப்பங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகத் தைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு மாணவியான குமாரி எம். பிரே மிகா, 21, இந்த விவாத அங்கம் பற்றிய தனது கருத்தைத் தெரி வித்தார். "இந்த விவாத அங்கத்தில் பல்வேறு கல்வி, சமூகப் பின்னணி களைக் கொண்ட இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் சவால் களைப் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். மற்ற இளைஞர்களுக்கு ஊக்கமூட்டு வது அவர்களின் நோக்கமாக இருந்தது. இதன்மூலம் இந்த விவாத அங்கம் உண்மையிலேயே சிறப் பான ஒன்றாக இருந்தது," என்று குமாரி பிரேமிகா கூறினார்.

இளையர்களின் பலதுறை திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் விருப்பங்களை மதித்துப் போற்றவும் சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்த 'இளையர்களைக் கொண்டாடுவோம்' கேளிக்கை விழாவில் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா (நடுவில்) குழுப் படம் எடுத்து மகிழ்ந்தார். படம்: சிண்டா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!