பயண முடிவில் அமெரிக்கா பற்றி பிரதமர் லீ ஆசியாவுக்கு மதிப்பு

ஆசியாவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் தருவதைத் தமது அதிகாரத்துவ அமெரிக்கப் பயணம் உணர்த்துவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.


வாஷிங்டனில் சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பும் கௌரவ விருந்தும் இதனைப் பிரதி பலிப்பதாக அவர் கூறியுள்ளார்.


தமது அமெரிக்கப் பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் ஊடகங்களிடம் பிரதமர் லீ பேசினார்.


"சிங்கப்பூரின் தோழர்கள் என்பதற்காக மட்டும் அவர்கள் நம்மை அழைக்கவில்லை. ஆசிய பசிபிக்கில் சிங்கப்பூர் இருக்கிறது. ஆசிய பசிபிக்கைப் போலவே அதிலுள்ள தனது தோழர்களையும் அமெரிக்கா மதிக்கிறது. அவ்வாறுதான் அமெரிக்காவும் பார்க்கப்பட வேண்டும். சிங்கப்பூரும் அமெரிக்காவை அப் படித்தான் பார்க்கிறது." என்றார் திரு லீ.


அரசியல் சிரமங்கள் இருந்த போதிலும் பசிபிக் நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (டிபிபி) ஏற்படுவதில் அதிபர் ஒபாமா தொடர்ந்து கடப்பாடு கொண்டிருந்ததைக் கண்டு தாம் உற்சாகமடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.


"நான் திரு ஒபாமாவைப் பற்றிய நல்லதொரு நினைவைச் சொல்ல வேண்டுமென்றால், ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு மாநாடு நடக்கும்போ தெல்லாம் 'டிபிபி'யின் முன்னேற்றம் குறித்துத் தொடர்ந்து கவனம் செலுத் துவார். ஒப்பந்தத்தை விரைந்து ஏற்படுத்தி முடிக்குமாறு தலைவர்களை அவர் கேட்டுக்கொள்வார்.


"ஜப்பானிலும் ஹவாயியிலும் டிபிபி உறுப்பினர்கள் ஒன்றுகூடிய போதிலும் அதன் பின்னர் நடந்த கூட்டங்களிலும் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அவர் தனது சொந்த ஆர்வத்தையும் முழுக் கடப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.


"தேர்தல் பிரசாரத்திற்கு மத்தி யிலும்-தமது உள்நாட்டு விவகா ரங்கள் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதி லும்-தமது பதவிக் காலத்தின் கடைசிக் கட்டத்தை நெருங் குகிறபோதிலும் பசிபிக் நா டுகளின் தடையற்ற ஒப்பந்தத்தில் இறுதியாகச் செய்ய வேண்டிய சில பணிகளை முடித்து அதற்கு அமெரிக்காவின் இசைவைப் பெற்று முழுமையடைய அதிபர் ஒபாமா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்," என்றார் பிரதமர்.


இந்த ஒப்பந்தம் ஏற்படச் சிங் கப்பூரும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார். விரிவான சிங்கப்பூர்-அமெரிக்க உறவு சுமுக மாக நீடிக்கிறது என்று குறிப்பிட்ட திரு லீ, வருங்காலத்திலும் இந்த உறவு கட்டிக்காக்கப் பட வேண்டும் எனத்தாம் விரும்புவதாகச் சொன்னார்.


"பல நல்ல அம்சங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் நாம் படிப்படியாகக் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் அவற்றை நாம் அடுத்த தலை முறைக்கும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் பல இளைய அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இங்கு அழைத்து வந்துள்ளேன்," என்றார் பிரதமர்.


திரு லீயின் அமெரிக்கப் பயணத்தில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தொழில் அமைச்சர் எஸ். ஈஸ் வரன், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், தற்காலிக கல்வி அமைச்சர் ஓங் யி கங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்டஃபர் டிசூசா, ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!