சாஃப்ரா பொங்கோலில் பதிவு செய்யப்பட்ட பிரதமரின் தேசிய நாள் செய்தி

பிரதமர் லீ சியன் லூங், இந்த ஆண்டு தேசிய நாள் செய்தியை சாஃப்ரா பொங்கோலிலிருந்து விடுக்கிறார். திரு லீ இதை நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார். தமது தேசிய நாள் செய்தியைப் பதிவு செய்ய நல்ல இடத்தை எப்போதுமே தான் தேடுவதாகவும் அண்மையில் திறக்கப்பட்ட சாஃப்ரா பொங்கோலை அதற்கான இடமாக இந்த ஆண்டு தான் தேர்வு செய்திருப்பதாகவும் திரு லீ குறிப்பிட்டு இருக்கிறார். சிங்கப்பூரின் 50வது ஆண்டு தேசிய நாள் செய்தி வரலாற்றுப் புகழ்மிக்க விக்டோரியா இசை அரங்கில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு புதிய இடத்தை தேர்ந்தெடுப்பது பற்றி திரு லீ தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். "அந்த இடத்தில் அடுத்த 50 ஆண்டுகளில் நாம் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கும் சிங்கப்பூரை காணமுடியும்.

"அந்த அனுபவத்தை அங்கு பெறமுடியும். அழகான பொங்கோல் நீர்வழி, புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், பூங்கா இணைப்புப் பாதைகளில் இளம் குடும்பத்தினர் உலாச் செல்லும் அழகு, உடற் பயிற்சி செய்யும் நளினம் எல்லா வற்றையும் அங்கு காணலாம்," என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார். திரு லீ தமது தேசிய நாள் செய்தி ஒளிபரப்பு செய்யப்படும் இட அழகைக் காட்டும் புகைப்படத் தையும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

பிரதமர் லீ சியன் லூங் இந்த ஆண்டு தேசிய நாள் செய்தியை சாஃப்ரா பொங்கோலில் இருந்து விடுக்கிறார். அந்த ஒளிப்பதிவின் போது எடுக்கப்பட்ட படத்தையும் அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!