ஒன்றுகூடி ஒளிமயம்

வீ. பழனிச்சாமி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் குறிக்கும் 51வது தேசிய தின அணிவகுப்பு மீண்டும் காலாங்கில் உள்ள தேசிய விளையாட்டரங்கத்துக்குத் திரும்பியுள்ளது. பழைய தேசிய விளையாட்டரங் கத்துக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரம் மாண்டமான விளையாட்டரங்கில் நேற்று சுமார் 55,000 பேர் திரண்டனர். படைப்பாளர்கள், தொண்டூழி யர்கள், அரங்க உதவியாளர்கள் என கிட்டத்தட்ட 10,000க்கு மேற் பட்டோர் இந்த அணிவகுப்பை மக்கள் முன் படைக்க அரும்பாடு பட்டிருக்கின்றனர். உள்ளரங்கில் நடைபெறுவதால், அதற்கேற்றாற்போல் அணிவகுப் பின் அம்சங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தொங்கு கலைஞர்களின் சாகச நடனங்கள், மிதக்கும் எதிர்கால நகரம், மினுமினுக்கும் பறக்கும் ஒற்றைக்கொம்புக் குதிரை, கண்ணைக் கவரும் உள்ளரங்கு வாணவேடிக்கை என பற்பல அம்சங்கள் பார்ப்போரைப் பரவசப்படுத்தின.

பாடாங்கிலோ, பழைய தேசிய விளையாட்டரங்கிலோ, மரினா பே மிதக்கும் மேடையிலோ நடந்த தேசிய தின அணிவகுப்புகளில் இடம்பெற்ற சிங்கப்பூர் மின்னற் படையினரின் வான்குடை சாக சம், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் போர் விமான சாகசக் காட்சி, முத்தாய்ப்பாக விளங்கிய பிரம்மாண்ட வெளிப்புற வாண வேடிக்கை ஆகியவை இவ் வாண்டு அணிவகுப்பில் இடம் பெறவில்லையே என்ற ஏக்கம் பார்வையாளர்களிடையே தென் பட்டது. இருப்பினும், உள்ளரங்கு அணிவகுப்பில் மேற்கூறப்பட்ட அங்கங்களைப் பாதுகாப்புக் கார ணங்களுக்காகவும் இதர கார ணங்களுக்காகவும் உள்ளடக்க முடியாது என்ற தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் இதற்குமுன் விளக்கி இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!