புகைமூட்ட பிரச்சினை மீண்டும் வரக்கூடும்

இந்தோனீசியாவின் ரியாவ் மாநி லத்தில் பல இடங்களில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க வலுவான நடவடிக்கைகள் எடுக் கப்படவில்லை எனில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வட்டார நாடுகளையும் புகைமூட்டம் பாதிக்கக்கூடும் என்று இந்தோ னீசியா தெரிவித்துள்ளது. "இப்போது, காற்று தென் கிழக்கு திசை நோக்கி வீசுகிறது. இதனால் இப்போது புகைமூட்டம் உருவாகும் பட்சத்தில் அது அண்டை நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது," என்று இந்தோ னீசிய வானிலை, பருவநிலை, நிலஇயற்பியல் ஆய்வு மையத் (பிகேஎம்ஜி) தலைவர் சுகிரின் கூறியுள்ளார்.

ரியாவ் மாநிலத்தில் நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 92 இடங்களில் தீப்பற்றி எரிந்ததா கவும் அவற்றுள் 84 இடங்கள் கடோலரப் பகுதியில் உள்ளவை என்றும் அவர் சொன்னார். ஆக அதிகமாக ரோக்கன் ஹிலிர் பகுதியில் மட்டும் 54 இடங்களில் சதுப்பு நிலக் காடுகள் தீப்பற்றி எரிவது துணைக் கோள்கள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டன. கடந்த ஞாயிறன்று 66ஆக இருந்த இந்த இடங்களின் எண் ணிக்கை கணிசமாகக் கூடி இருப்பதற்கு வறண்ட கால நிலையே காரணம் என்று தெரி விக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் இருந்தே புகை நாற்றத்தை உணர்ந்ததாக டூரி, மண்டாவ் மாவட்டங்களைச் சேர்ந்த குடி யிருப்பாளர்கள் குறிப்பிட்டனர். இதனிடையே, நேற்றுப் பிற் பகலில் கோலாலம்பூரில் புகை மூட்டம் படர்ந்துள்ள படங்களை சமூக ஊடகவாசிகள் சிலர் தங்கள் பக்கங்களில் பதிவேற்றம் செய்தனர்.

புகைமூட்டம் ஏற்படுவதைத் தடுக்கும்விதமாக தெற்கு சுமத்ராவின் பலெம்பாங் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இந்தோனீசிய தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!