தேசிய தினப் பேரணி உரை: உடல்நலக்குறைவுக்குப் பின்னும் உரை

தேசிய தினப் பேரணி உரையை ஆற்றிக்கொண்டிருந்தபோது பிரதமர் லீ சியன் லூங்கிற்கு திடீரென உடல்நலம் குன்றியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆயினும், சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் மேடையில் தோன்றி பலத்த கரவொலிகளுக்கு இடையே தமது உரையைத் தொடர்ந்தார் பிரதமர்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச் சியை உறுதி செய்தல், உலகில் நமக்கான இடத்தை நிலைநிறுத்துதல், சிங்கப்பூருக் கான நல்ல அரசியலை உறுதி செய்தல் ஆகிய மூன்று சவால்களை நாடு எதிர் நோக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். எதிர்கால சிங்கப்பூரை அமைப்பதில் தமது அக்கறைகளையும் திட்டங்களை யும் பகிர்ந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங், அந்தப் பணியில் சிங்கப்பூரர் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

அங் மோ கியோவில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியபோது பிரதமர் லீ இவ்வாறு கூறினார். ஒவ்வொரு தலைமுறையினரும் முந் தைய தலைமுறையினரைவிட சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளனர் என்ற அவர், எதிர்காலம் குறித்து சிந்தித்து அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கி, அடுத்த தலைமுறையினருக்கு சாத்திய முள்ள நல்ல வாய்ப்புகளை வழங்கி வருவதுதான் சிங்கப்பூரின் கதையாக, வழக்கமாக இருந்து வருகிறது என்றும் சொன்னார். அதன்படி, "இளைய தலைமுறையினர் வாய்ப்புகளை அனுபவித்து நல்ல வாழ்க் கையை வாழும் இடமாக, நமது குடும் பங்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணரும் இடமாக, அதே சமயம் எவருக்கும் வாய்ப்பு மறுக்கப்படாத, அனைவரையும் உள்ளடக்கிய சமுதா யத்தைக் கொண்ட சிங்கப்பூரை நாம் உருவாக்க வேண்டும்," என்றார் அவர்.

தமது ஆங்கில உரையின்போது பிரதமருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஆகியோர் விரைந்து மேடையில் ஏறி பிரதமரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டனர். பின்னர் அவர் மேடையின் பின்புறம் அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு மருத்துவர்கள் குழு அவரைப் பரிசோதித்து, சிகிச்சை அளித்தது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், பிரதமருக்கு லேசான மயக்கம்தான் என்றும் நீண்ட நேரம் நின்றிருந்ததும் உடலில் நீர்ச்சத்து குறைந்ததுமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார். பிரதமர் நலமுடன் இருப்பதாகச் சொன்ன திரு தர்மன், கவலைப்படும்படியாக எதுவுமில்லை என்று மருத்துவக் குழு தெரிவித்ததாகவும் சிறிது ஓய்விற்குப் பின் அவர் தமது உரையைத் தொடர விரும்புவதாகவும் சொன்னார். பிரதமரின் இதயம் நன்றாக செயல்படுவதாகவும் பக்கவாதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இதையடுத்து, இரவு 9.20 மணிக்கு நின்ற தமது உரையை 10.40 மணிக்கு மீண்டும் தொடங்க பிரதமர் வந்ததும் அரங்கிலிருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பெரும் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!