தாய்லாந்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 30 பேர் காயம்

தாய்­லாந்­தின் கட­லோர நக­ர­மான பட்­டா­ணி­யி­லுள்ள சதர்ன் ரிவர் வியூ ஹோட்­ட­லில் நேற்று முன்­ தி­னம் இரவு இரண்டு குண்டு வெடிப்­பு­கள் நிகழ்ந்தன. இதில் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­து­டன் 30 பேர் படு­கா­ய­மடைந்த­னர். அண்மை­யில் தாய்­லாந்­தின் தெற்­குப் பகு­தி­யில் சுற்­று­லாப் பய­ணி­கள் அதிகம் செல்லும் ஏழு இடங்களில் குண்­டு­வெ­டிப்புகள் நிகழ்த்­தப்­பட்­டன. அதில் 4 பேர் கொல்­லப்­பட்­ட­னர். அந்தச் சம்ப­வம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் நிறைவுபெறு­வ­தற்கு முன்னரே மீண்­டும் குண்­டு­வெ­டிப்­புச் சம்ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

இந்தக் குண்­டு­வெ­டிப்­புக்கு இது­வரை­யி­லும் எந்த ஒரு பயங்க­ர­வாத அமைப்­பும் பொறுப்பேற்­க­ வில்லை. இருப்­பி­னும் தாய்­லாந்து பாது­காப்­புத் திறனா­ளர்­கள் சிலர், இது தாய்­லாந்­தின் தெற்­குப் பகு­தி­யில் செயல்­பட்டு வரும் கிளர்ச்­சி­யா­ளர்­கள் வேலை­யாக இருக்­க­லாம் என்­றும் இது­போன்ற குண்­டு வெ­டிப்­பு­களை அவர்­கள் நிகழ்த்­தி­ய­தற்­கான ஆதா­ரங்கள் இருப்­பதா­கவும் கூறு­கின்ற­னர். தாய்­லாந்­தின் தற்­காப்பு அமைச்­சர் பிர­விட் வோங்­சு­வான் கூறுகை­ யில், "செவ்­வாய்க்­கி­ழமை இரவு பட்­டா­ணி­யில் நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்­புக்­கும் அண்மை­யில் ஏழு மாகா­ணங்களில் நடந்த தாக்­கு­த­லுக்­கும் எவ்­வி­தத் தொடர்­பு­மில்லை," என்று பேங்காக் அரசு மாளிகை­யில் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார். முதல் குண்டுவெடிப்பு ஹோட்­ட­லுக்­குப் பின்­பு­றம் இருக்­கும் வாக­னம் நிறுத்­தும் பேட்டை­யில் நிகழ்ந்தது. இதில் யாருக்­கும் காய­மில்லை.

தாய்­லாந்­தின் பட்டாணி நகரில் ஒரு ஹோட்டலின் முகப்பில் குண்டு வெடிப்பால் உருக்குலைந்துபோன வாகனம் ஒன்றைக் காவல்துறையினர் பார்வையிடுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!